ரிலீசுக்கு முன்பே 600 கோடியைத் தாண்டிய பிசினஸ்! பொறி பறக்கவிடும் ரஜினியின் ‘அண்ணாத்தே’!

0
79

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “அண்ணாத்த” படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரிலீசுக்கு முன்பாகவே இந்தப்படம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.

விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை என வெற்றிப் படங்களை இயக்கிய சிவா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்துள்ளனர். ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, வேல ராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியுள்ளது.

2 மணிநேரம் 43 நிமிடங்கள் நேரம் கொண்ட இந்த படத்தில் ரஜினியின் பெயர் கணேசன் என தகவல்கள் கிடைத்துள்ளன. தீபாவளியன்று அதாவது நவம்பர் 4 அன்று, தமிழ் மற்றும் தெலுங்கில் அண்ணாத்தே திரைக்கு வரும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தெலுங்கில் இந்ப்படத்துக்கு  ‘பெத்தண்ணா’ என பெயரிடப்பட்டுள்ளது. 14-ந் தேதி டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இது அண்ணாத்த தீபாவளி என்று சொல்லும் அளவிற்கு டீசரில் வெடிக்கும் சண்டைக்காட்சிகளை காண முடிந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பிசினஸ் வாயைப் பிளக்க வைக்கிறது. அண்ணாத்தே படத்தின் பட்ஜெட் தோரயமாக 220 கோடி ரூபாய் வரை இருக்கலாம். ரஜினியின் சம்பளம் ரூ.130 கோடி+GST, கதாநாயகி, மற்ற நடிகர்கள், இயக்குநர், இசையமைப்பாளர், புரொடெக்ஷன் செலவு ஆகியவை சற்றேறக்குறைய 70 கோடி ரூபாய் வரை ஆகியிருக்கலாம். பிரின்ட் மற்றும் விளம்பரத்துக்கு ரூ.15 கோடி செலவு செய்யப்பட்டிருக்கும். இதன்படி பார்த்தால், இதர செலவீனங்களையும் சேர்த்து படத்துக்கான பட்ஜெட் ரூ.220 கோடியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேநேரம், அண்ணாத்தே படம் ரிலீசுக்கு முன்பாகவே, இதுவரை 520 கோடி ரூபாய் அளவுக்கு பிசினஸ் ஆகியிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு வியாபாரம் ரூ.120-130 கோடி, தெலுங்கு வியாபாரம் ரூ.70 கோடி, கர்நாடகா வியாபாரம் ரூ. 45 கோடி, வெளிநாட்டு வருமானம் ரூ. 120 கோடி, தமிழ் டிவி உரிமம் ரூ.65 கோடி, தெலுங்கு டிவி உரிமம் ரூ.20 கோடி, மலையாளம் டிவி உரிமம் ரூ.7 கோடி, ஹிந்தி டிவி உரிமம் ரூ.25 கோடி, ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.30 கோடி, ஆடியோ உரிமம் ரூ.8 கோடி என ரூ.620 கோடி ரூபாய் பிசினஸ் ஆகியிருப்பதாக தெரிகிறது.

தமிழ்நாட்டை ஒட்டிய அண்டை மாநிலங்கள் மற்றும் அம்மாநில பெருநகரங்கள் மூலம் ரூ.10 கோடி வருமானம் கிடைக்கக்கூடும். இதுமட்டுமல்லாமல், அனைத்து மொழி ஓடிடி தளங்களுக்கு விற்பனை, சன் டிவியின் பட உரிமம் என இது தோராயமாக ரூ. 80 கோடி வரை இருக்கலாம். இது தோராயக் கணக்குதான். இந்தத் தொகை அதிகமாகவும் இருக்கலாம்.

தீபாவளி ரிலீஸ் அன்று மட்டுமே, அண்ணாத்தே படத்தின் தியேட்டர் வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டும் என உறுதியாக கணக்கிடப்படுகிறது. ’வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவேயில்ல’ என்ற படையப்பா பட நீலாம்பரி வசனம் ரஜினி விஷயத்தில் இன்றும் ஒத்துப்போகிறது. ரஜினியை வைத்து படம் எடுத்தால் வெற்றி உறுதி என்பதுடன், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் லாபம் கிடைப்பதால்தான் ரஜினி இன்னமும் சூப்பர் ஸாடாராக இருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry