தெலுங்கில் வெற்றி பெற்ற ‘பெல்லி சோப்புலு’தான் இப்ப தமிழ்ல ‘ஓ மணப்பெண்ணே’ன்னு டைட்டில் மாறி ரிலீஸாகிருக்கு. டைட்டில் மட்டும் இல்லாம ஹீரோ, ஹீரோயின்ஸ்ன்னு மொத்த டீமும் புதுசாவே களம் இறங்கிருக்காங்க.
தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கியிருந்த தெலுங்கு படத்தில், விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடிச்சிருந்தாங்க. அதே பாத்திரங்கள்ல தமிழில் ஹரிஷ் கல்யாணும் பிரியா பவானி சங்கரும் நடிக்க, கார்த்திக் சுந்தர் இயக்கியிருக்கார். தெலுங்கு ‘பெல்லி சூப்புலு’ மாதிரியே, தமிழ் ‘ஓ மணப்பெண்ணே’வும் ஃபுல் அண்ட் ஃபுல் செம்ம கலர்புல்லான ஃபீல்குட் படமா ரிலீஸாகிருக்கு.
தெலுங்குல பார்த்தவங்களுக்கு கண்டிப்பா இந்தப் படத்தோட ஒன்லைன் தெரியும். தமிழ்லயும் அதே லைன்–அப்ல தான் உருவாகிருக்கு. தமிழ் சினிமால அடிக்கடி பார்க்குற பொறுப்பில்லாத வழக்கமான என்ஜ்னியரிங் பட்டதாரியான நாயகன் கார்த்திக்கு, பொண்ணு பார்க்க குடும்பமே கிளம்பிப் போகுது. கூடவே கார்த்திக்கோட நண்பர்களும் போறாங்க. அப்படி ஹீரோயின் ஸ்ருதியோட வீட்டுக்குப் போக, அங்க எதிர்பாராதவிதமா கார்த்திக்கும் ஸ்ருதியும் ஒரே ரூம்ல ரொம்ப நேரமா இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுது.
இரண்டு குடும்பமும் சேர்ந்து ரூம் கதவு ஓப்பன் பண்றதுக்குள்ள தங்களோட பழைய காதலையும் கனவுகளையும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஷேர் பண்ணிக்கிறாங்க. கடைசியா இரண்டு பேருமே ‘ஃபுட் டிரக்’ (Food Truck) அப்படிங்குற, அட அதாங்க, கையேந்தி பவன் கடை நடத்தலாம்ங்குற ஐடியாவுக்கு வர்றாங்க. அது, மேரேஜ் பண்ணவே விருப்பம் இல்லாத ஹீரோவும் ஹீரோயினும் ‘ஃபுட் டிரக்’ கனவு மூலமா ஃப்ரண்ட்ஸ் ஆகப்போற நேரத்துல, தவறுதலா ஸ்ருதிய பொண்ணு பார்க்க வந்த விசயம் தெரியுது. அதனால ரெண்டு பேருமே பிரிஞ்சுப் போறாங்க, திரும்ப அவங்க சேர்ந்தாங்களா? இல்ல ஹீரோ கார்த்திக், பணக்கார மாமனாருக்கு மருமகனா போறாரான்னு படத்த பார்த்தா தெரிஞ்சுக்கலாம்.
இடைவேளை வரை ஸ்பீடாகவும் ஜாலியாகவும் வேகமெடுக்குற ஸ்கீர்ன்ப்ளே, செகண்ட் ஹாஃப்ல ரோலர் கோஸ்டர் மாதிரி சர்க்கஸ் பண்ணுது. இந்த திரைக்கதையில் கார்த்திக்கா ஹரிஷ் கல்யாண், ஸ்ருதியா பிரியா பவனி சங்கர் இவங்க கூட, அஸ்வின் குமார், வேணு அர்விந்த், அன்புதாசன், அபிஷேக் குமார், அனிஷ் குருவில்லா இவங்களும் சூப்பரா பெர்பாமன்ஸ் பண்ணிருக்காங்க.
கதையும் திரைக்கதையும் கொஞ்சம் வழக்கமான சினிமாவாகத்தான் தெரியுது. ஒருசில காட்சிகளைத் தவிர மற்ற இடங்கள்ல அடுத்து இதுதான் நடக்கப் போகுதுன்னு ரொம்ப ஈஸியா கண்டுபுடிக்க முடியுது. இந்த குறைகளைலாம் தீபக் சுந்தரராஜனோட கலகலப்பான வசனங்கள் மறக்கடிச்சிடுது. அனபெல் சேதுபதி படத்தோட இயக்குநரா ஜொலிக்க முடியாத தீபக் சுந்தரராஜன், இந்தப் படத்துல வசனம், திரைக்கதை எழுதி நல்ல ஸ்கோர் பண்ணிருக்கார். ஹரிஷ் கல்யாணோட நண்பர்களா வர்ற அன்புதாசன், அபிஷேக் குமார் இப்போ ட்ரெண்டிங்ல இருக்குற டைமிங் கவுன்ட்டர் காமெடி பண்ணி, ஆஃபர்ல வாங்குன குக்கர் மாதிரி கிச்சுமுச்சு மூட்டுறாங்க.
ஹரிஷ் கல்யாணோட அப்பாவா நடிச்சிருக்குற வேணு அரவிந்தும் தன்னோட கடுகடுப்பான ஆக்டிங்ல ரசிக்க வச்சிருக்காரு. சிவகுமார் கால்ஷீட் வேணும்ன்னு நினைக்குற டைரக்டர்ஸ் இனிமேல் வேணு அர்விந்த கமிட் பண்ணிக்கலாம். சில காட்சிகள்ல அப்படியே ‘சேது’ படத்துல வர்ற விக்ரமோட அண்ணன் மாதிரி, அவரோட உடல்மொழியும் முகபாவனைகளும் சிவகுமார கண்முன்னால நிறுத்துது. அதேமாதிரி பிரியா பவானி சங்கரோட அப்பாவ நடிச்சிருக்குற கே.எஸ்.ஜி.வெங்கடேஷும், தொழிலதிபரா வர்ற அனிஷ் குருவில்லாவும் இருவேறு குணாதிசியங்கள் கொண்ட அப்பாக்கள ஞாபகப்படுத்திருக்காங்க.
ஹரிஷ் கல்யாணுக்கு வழக்கமான பிளேபாய் பாத்திரமா இருந்தாலும்; அவரோட முந்தின படங்கள் மாதிரி இல்லாம பல காட்சிகள்ல அட்டகாசமா ஸ்கோர் பண்ணிருக்கார். ஆனாலும் அதையும் மீறி அவரோட முந்தின படங்கள்ல இருந்த குறும்புத்தனங்கள் இதுலயும் அங்கங்க நறுக்குன்னு தெரியுது. இன்னும் கொஞ்சம் புதுமையான பாத்திரங்கள்லயும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சி பண்ணா, தனித்து வலம் வரலாம்.
பிரியா பவானி சங்கருக்கு ரொம்ப அழுத்தமான கேரக்டர், படம் முழுக்க ஆன் ஸ்கிரீன்ல ஸ்மார்ட்டா பெர்ஃபாமன்ஸ் பண்ணிருக்காங்க. அப்படியே ரசிகர்களோட இதயத்தையும் கண் சிமிட்டியே கொள்ளையடிச்சிட்டு போய்டுறாங்க. ஆஸ்திரேலியா கனவு, அஸ்வினுடனான காதல் தோல்வி, அப்பாவிடம் பிடிவாதம் செய்வது, பிசினஸ்ல சக்ஸஸ் பண்றதுன்னு, கிடைச்ச ஆல் ஏரியாஸ்லயும் அல்டிமேட்டா அட்ராசிட்டி பண்ணிருக்காங்க. அஸ்வினுக்கு அவ்வளவு முக்கியமான கேரக்டர் இல்லைன்னு தான் சொல்லனும். பிரியா பவானி சங்கர காதலிச்சிட்டு, சூழ்நிலை காரணமா அவர விட்டுட்டுப் போற பார்த்து பார்த்துப் பழகிப்போன கேமியோ ரோல் தான். இருந்தாலும் முடிஞ்ச வர்ற தன்னோட கேரக்டர்ல எதிர் நீச்சலடிச்சு பார்த்திருக்காரு அஷ்வின்.
விஷால் சந்திரசேகரோட இசைல பாடல்களும், பிஜிஎம்மும் ‘ஓ மணப்பெண்ணே’ படத்துக்கு ப்ளஸ். இன்னொரு முக்கியமான ஜீவன், கிருஷ்ணன் வசந்தோட ஒளிப்பதிவு. படம் முழுக்க அழகழகான ஷாட்ஸ் வச்சி ஸ்மார்ட் லுக் கொடுத்திருக்காரு. ஃபேண்டசி படத்துக்கான எல்லா கலர்ஸையும் தன்னோட கேமரால அமர்க்களமா சுட்டுத் தள்ளியிருக்கார் கிருஷ்ணன் வசந்த். கிருபாகரன் தன்னோட எடிட்டிங்ல தயவு தாட்சணியம் இல்லாம எக்ஸ்ட்ரா கட்டிங் போட்டுருந்தா செகண்ட் ஆஃபும் லவ்லியா இருந்திருக்கும்.
டைரக்டர் கார்த்திக் சுந்தருக்கு இதுதான் முதல் படம்; அதெல்லாம் இல்லாத அளவுக்கு இயக்குநரா அவர் ஆல் பாஸ் ஆகிருக்கார். ரீமேக் இல்லாம நேரடியான தமிழ்ப் படம் டைரக்ட் பண்ணும்போது தான் கார்த்திக் சுந்தரோட மற்ற திறமைகளையும் கணக்குல எடுக்க முடியும். டிவிஸ்ட் இல்லாத திரைக்கதை, வழக்கமான சினிமாத்தனங்கள் என படத்தில் சில குறைகள் இருந்தாலும், ஏதோ ஒரு மேஜிக், படத்தை முழுக்க ரசிக்க வச்சிருக்கு.
‘ஓ மணப்பெண்ணே’ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாவது கொஞ்சம் ஏமாற்றமே!. தியேட்டர்ஸ்ல ரிலீஸாகிருந்தா திரையரங்க உரிமையாளர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்திருக்கும். ஓ மணப்பெண்ணே – ஒரிஜினல்க்கு அவ்வளவு டஃப் கொடுக்கலண்ணே.
விமர்சனம் : – களந்தை அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர்
தொடர்புக்கு : kalandhai.abdulrahman@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry