சபரிமலையில் அடுத்த ஆண்டு கோயில் நடை திறக்கப்படும் நாட்கள்! அட்டவணை வெளியிட்டது தேவசம் போர்டு!

0
242

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அடுத்த ஆண்டு (2022) நடை திறப்பு மற்றும் சிறப்பு பூஜை நாட்கள் குறித்த கால அட்டவணையை திருவிதாங்கூர் தேவஸம் போர்டு வெளியிட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக கோயில் நடை 2022-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை மார்ச் 8-ந்தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்ச் 9-ந் தேதி திருவிழா கொடியேற்றம். 18-ந் தேதி பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.

File Image

சித்திரை மாத பூஜைகளுக்காக ஏப்ரல் 10-ந் தேதி நடை திறக்கப்பட்டு 18-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். 15-ந் தேதி விஷு பண்டிகை விழா நடக்கிறது. வைகாசி மாத பூஜைக்காக மே 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி நடை அடைக்கப்படும். சபரிமலை அய்யப்பன் விக்ரகம் நிறுவப்பட்ட நாளையொட்டி 8-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 9-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆனி மாத பூஜைக்காக 2022 ஜூன் 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடக்கும். ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

File Image

புரட்டாசி மாத பூஜைக்காக மீண்டும் சபரிமலை அய்யப்பன் கோயில் நடை செப்டம்பர் 16-ந் தேதி திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ந் தேதி நடை திறக்கப்படும். 22-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சித்திரை ஆட்ட விஷேச பூஜைக்காக அக்டோபர் 24-ந் தேதி நடை திறக்கப்படும். 25-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும். 2022-ம் ஆண்டின் மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்படும். டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry