பெரும்பாலான வீடுகளில் பிரதான காலை அல்லது இரவு உணவாக இருப்பது இட்லி, தோசை மற்றும் சப்பாத்திதான். அவற்றுக்கு சுவையான சைடிஷ் செய்வதுதான் இல்லதரிசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். குட்டீஸ்கள் மற்றும் வீட்டு ஆண்களுக்கு பிடித்ததுபோல தினமும் புதுப்புது சட்னிகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
வாழைத்தண்டில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் அளவிட முடியாதவை. குறிப்பாக நம்முடைய சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வாழைத்தண்டு பல நன்மைகளை வழங்குகிறது. நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துவர செரிமானம் சீராக இருக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். சிறுநீரக கற்களை இயற்கையான முறையில் அகற்ற வாழைத்தண்டு உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் வாழைத்தண்டு சாப்பிடலாம். ஆனால் அதன் துவர்ப்பு சுவை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காது.
Also Read : சுவையான பாலக் பன்னீர் சப்பாத்தி செய்வது எப்படி? Palak Paneer Chapati Recipe!
வாழைத்தண்டின் சுவை பிடிக்காதவர்களுக்கு அதனை வேறு வழிகளில் சமைத்துக் கொடுப்பது புத்திசாலித்தனமான வழியாகும். எனவே வாழைத்தண்டை சட்னியாக அரைத்துக் கொடுப்பது ஆரோக்கியத்தையும் கொடுக்கும், இட்லி, தோசை போன்றவற்றுக்கு சுவையான சைடிஷாகவும் இருக்கும். வாழைத்தண்டு சட்னி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* வாழைத்தண்டு – 1 கப் (நார் இல்லாமல் சுத்தம் செய்தது நறுக்கியது)
* காய்ந்த மிளகாய் – 2
* பச்சை மிளகாய் – 1
* துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
* கடலை பருப்பு – 1 ஸ்பூன்
* தேங்காய் – 2 ஸ்பூன்
* இஞ்சி – சிறிதளவு
* கருவேப்பிலை – சிறிதளவு
* பெருங்காயம் – சிறிதளவு
* உப்பு – தேவையான அளவு
* எண்ணெய் – சிறிதளவு
* கடுகு – 1/2 ஸ்பூன்
செய்முறை:
1. வாழைத்தண்டை நறுக்கி நீரில் போட்டு வைத்துக்கொள்ளவும் (நீரில் சிறிது புளி சேர்க்கலாம்).
2. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை வறுக்கவும்.
3. அதன்பின் வாழைத்தண்டை சேர்த்து வேகவைக்கவும்.
4. தேங்காய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து சட்னியாக ஆக்கவும்.
5. கடுகு தாளித்து மேலே சேர்த்தால் சுவையான வாழைத்தண்டு சட்னி தயார்!
வாழைத்தண்டு சட்னி சுவையானதுடன் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடலுக்கு மிகுந்த பலன் அளிக்கும் உணவாகும். வாழைத்தண்டு சட்னியை வாரத்திற்கு 2-3 முறை உணவில் சேர்த்தால் உடல்நலம் மேம்படும்.
வாழைத்தண்டு வைட்டமின் B6 நிறைந்தது. மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் இது நன்மை பயக்கும். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி வாழைத்தண்டு சாப்பிடுங்கள்.
அமிலத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டை வாரம் இரண்டு முறையாவது உட்கொள்ள வேண்டும். இது உடலில் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தி சமநிலையை பராமரிக்கிறது. நெஞ்செரிச்சல், அசௌகரியம் மற்றும் வயிற்றுவலி ஆகியவற்றை குணப்படுத்தவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாழைத்தண்டில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க மற்ற உணவுகளுக்கு பதிலாக வாழைத்தண்டை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இதை சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது, இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.
வாழைத்தண்டு பித்தப்பையை சுத்தமாக வைத்து சிறுநீரக கற்கள் சேராமல் தடுக்கிறது. வாழைத்தண்டு சாறுடன் ஏலக்காய் பொடி, மோர் சேர்த்து கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை சுத்தமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாப்பிட ஏற்ற பானம் இதுவாகும்.
உடலில் இருந்து நச்சுகளை அகற்ற வாழைத்தண்டு உதவுகிறது. சிறுநீரக கற்களை இயற்கையான முறையில் அகற்றவும் இது பயனுள்ளதாக இருக்கும். வாழைத்தண்டை வெட்டிய பின்னர் அடிப்பகுதியில் வரும் தண்ணீரை வடிகட்டி அருந்தினால் சிறுநீரக கற்கள் வெளியே வந்துவிடும்.
வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின் B6 மற்றும் இரும்பு சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவுகின்றன. எனவே இரும்பு சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். வாழைத்தண்டில் அதிக நீர் உள்ளது, இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry