அரசு வழக்கறிஞர் பணிக்கு பேரம்! வக்கீலிடம் பேசும் திமுக பிரமுகர்! ஆடியோ வெளியானதால் பரபரப்பு!

0
140

சிவகங்கை மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் பணி வாங்கித் தருவதாக திமுக பிரமுகர் ஒருவர் வக்கீலிடம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 14-ந் தேதி, 9 அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் உள்ளிட்ட  வழக்கறிஞர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 7 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், மதுரை கிளைக்கு 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், சென்னை மற்றும் மதுரைக்கு தலா ஒரு அரசு பிளீடர் போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன. அதேபோல், 33 அரசு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் 55 அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 191 அரசு வழக்கறிஞர்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. வரும் 29ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் பொதுத்துறைக்குப் பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். அதேநேரம் அரசு வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பிரச்னையும் இன்றி நகர்கிறது. எனவே, அரசு வழக்கறிஞர் முதல் வங்கி சட்ட ஆலோசகர் பணி வரை, அனைத்து நியமனமும் பேரம் பேசி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை நிரூபிக்கும்விதமாக, சிவகங்கை மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் பணி வாங்கித் தருவதாக திமுக பிரமுகர் சேகர் என்பவர், வக்கீல் ஒருவரிடம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. இவர், மாவட்ட துணைச் செயலாளர்  சேங்கை மாறனின் உதவியாளர் என்று கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry