திமுக-வை வறுத்தெடுத்த பாதிரியார்! எங்கடா விடியல கொடுத்தீங்க? நாடார்களுக்கு புத்தி உண்டா?

0
56

மத மோதலைத் தூண்டும் விதமாக பேசியதாக வழக்குப் பதியப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்யுமாறு பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது. ஜார்ஜ் பொன்னையா, திமுகவை கடுமையாக விமர்சித்திருப்பது அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.   

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பனவிளை சர்ச் பங்குதந்தையும், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகருமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கலந்துகொண்டார். அவர் பேசும்போது, தமிழகத்தில் தி.மு.க வெற்றிபெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்றார். அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் குறித்துப் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சட்டை போடாமல் கோயிலுக்குச் சென்ற அமைச்சர் மனோ தங்கராஜை கிறுக்கன் என்றும், ஸ்டாலின் விடியலைப் கொடுக்கப்போறாரு சொன்னீங்க, எங்கடா விடியலை கொடுத்தீங்க என்றும் விமர்சித்தார்.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் திமுகவுக்கு வாக்குப் பிச்சை போட்டனர், நாடார்களுக்கு புத்தி உண்டா? என்று அவர் பேசினார். பூமாதேவியை இழிவுப்படுத்திய ஜார்ஜ் பொன்னையா, எங்க மயிக்கூட நீங்க புடுங்க முடியாது என்றார். மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் வளர்ந்து வருகிறோம் என்பது இந்து சமூகத்துக்கு எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார். RDO-வுக்கு அறிவு வேண்டாமா என்று அரசு அதிகாரிகளையும் அசிங்கப்படுத்திய ஜார்ஜ் பொன்னாயா, பாதிரியார்கள் என்றால் பூசாரிகளைப் போல மணி அடிக்கும் ஆள் என்று நினைக்க வேண்டாம் என்று கூறினார்.

செத்தவனுக்கு ஓதும் மந்திரத்தை கல்யாணத்துக்கு ஓதுவான் என்று பிராமணர்களை விமர்சித்த அவர், மோடி, அமித் ஷா என்பது அசிங்கமான பெயர், நாம் நம்பும் கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால், மோடியையும், அமித் ஷாவையும் நாயும் புழுக்களும் சாப்பிடும் என்று சாபமிட்டார். வரலாறு இதைக் காணும்,  எனது சாபம் அவர்களை அழிக்கும் என்றும் ஜார்ஜ் பொன்னையா கூறினார். பூமாதேவி, பாரதமாதா குறித்தும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார்

ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அந்த வீடியோ எடிட் செய்து போடப்பட்டிருக்கிறது. யாருடைய மத உணர்வும் புண்படும்படி பேசவில்லை. அப்படிப் புண்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறோம். இனி எதிர்காலத்தில் இப்படி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்என்றார்.

ஜார்ஜ் பொன்னையா பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து இதுவரை கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. அவர் கடுமையாக விமர்சனம் செய்த திமுக அமைச்சர்கள், எம்.எல்..க்களும், பாதிரியார் பேசியது சரி என்பது போல அமைதி காக்கிறார்கள். பெயரளவுக்கு வழக்குப் பதிவு செய்துவிட்டு, ஜார்ஜ் பொன்னையா இதுவரை கைது செய்யப்படாதது, திமுக கிறிஸ்தவர்களின் கண் அசைவில் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்தில், அரசையும், கட்சியையும் வழிநடத்தும் மு.. ஸ்டாலின் மவுனமாக இருப்பது திமுகவில் உள்ள இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. மதமோதலை உருவாக்க முயற்சிக்கும் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. ஜார்ஜ் பொன்னையா விவகாரத்தில் ஊடகங்களும் மவுனித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry