சுகரை கட்டுப்படுத்தி,  இன்சுலினை அதிகரிக்கும் பானங்கள் என்னென்ன தெரியுமா..?

0
57
Struggling with blood sugar control? Explore a range of delicious and healthy drinks that can help naturally lower blood sugar, improve insulin function, and support overall well-being. Find simple and effective ways to manage your blood sugar.

உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பது நீரிழிவு நோயின் ஆரம்பம் என்று கூறலாம். இதன் விளைவாக உடலின் பல உறுப்புகளில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். மோசமான வாழ்க்கைமுறை, உணவுமுறை உள்ளிட்டவை காரணமாக தற்போது பலருக்கும் நீரிழிவு நோய் பாதிப்பானது ஏற்படுகிறது.

இது ஒரு அமைதியான உயிர்க் கொல்லி என்று கூட கூறலாம். எனவே உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். சர்க்கரை அளவு அதிகரித்தால் அது சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. நீரிழிவு நோயைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தும் முயற்சியில் இருக்கும்போது, உங்கள் உணவு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும். உடலில் சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் அளவை அதிகரிக்க உதவும் ஜூஸ் வகைகள் சிலவற்றை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுபற்றி தெரிந்து கொள்வோம்.

Also Read : குழந்தைகளை எந்த வயது வரை உங்களுடன் தூங்க வைக்கலாம்? பெற்றோருக்கான முக்கிய டிப்ஸ்!

பாகற்காய் : கசப்பு சுவை கொண்டது. இது சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு செயல்திறனைக் கொண்டுள்ளது. இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரித்தால், தொடர்ந்து பாகற்காய் சாற்றைக் குடிக்க வேண்டும். பாகற்காய் சாற்றில் இன்சுலின் போன்ற புரோட்டீனான பாலிபெப்ட்டைடு பி உள்ளது. இது ரத்த சர்க்கரையை குறைப்பதில் அற்புதமான விளைவுகளை கொண்டுள்ளது.

தக்காளி : ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை உடலில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தக்காளியை ஜூஸ் அல்லது சூப் செய்து அருந்தி வந்தால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.

கீரை : கீரையில் நிறைய வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளன. கீரை சாறு குடிப்பது குளுக்கோஸைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதன் விளைவாக, நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். அதிமருந்து நிறைந்த வெந்தயக் கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதேபோல, பருப்புக்கீரை, கண்டங்கத்திரி கீரை, கசப்பு நிறைந்த வெந்தயக்கீரைகளையும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

டர்னிப்ஸ் : கோசுக்கிழங்கு (Turnip) என்பது வேர் காய்கறிகள் வகையைச் சார்ந்த கிழங்கு ஆகும். அவை வைட்டமின் சி, ஃபோலேட், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். டர்னிப் கிழங்கில் ஆல்பா-லிபோயிக் அமிலம் எனப்படும் ஆக்ஸிஜனேற்றம் உள்ளது. இது குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.

Healthy bunches of fresh turnips | Looking for natural ways to manage your blood sugar? This guide explores a variety of refreshing drinks that can help improve insulin sensitivity and support healthy blood sugar levels. Discover delicious and easy-to-make options for a healthier you.

கேரட் : பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை உடலில் சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்படுத்தும். கேரட் மாவுச்சத்து இல்லாத காய்கறியாக இருப்பதுடன், இதிலுள்ள குறைந்த க்ளைசைமிக் குறியீடு மற்றும் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் சில பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் அவற்றை தாராளமாக சாப்பிடலாம் என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் தெரிவித்துள்ளது.

Also Read : வாழ்க்கையில் எளிதாக வெற்றிபெற வேண்டுமா? உங்களுக்கு கைகொடுக்கும் காலை நேர பழக்கவழக்கங்கள்!

இன்சுலின் என்பது உங்கள் கணையம் உருவாக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது இரத்தத்திலிருந்து சர்க்கரையை (குளுக்கோஸ்) உங்கள் தசைகள், கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்களுக்கு நகர்த்த உதவுகிறது. அங்கு உங்கள் உடல் அதை ஆற்றலுக்காகப் பயன்படுத்துகிறது. இந்த செல்கள் இன்சுலினுக்கு சரியாக பதிலளிக்காதபோதும், குளுக்கோஸை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாதபோதும் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது.

உங்களிடம் போதுமான இன்சுலின் இல்லாதபோது,  உங்கள் உயிரணுக்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, உங்கள் இரத்த ஓட்டத்தில் கூடுதல் குளுக்கோஸ் தங்கிவிடும். இது உங்கள் இரத்த ஓட்டத்தில் அதிக அளவு சர்க்கரையை உருவாக்குகிறது. இது டைப் 2 ப்ரீடியாபயாட்டீஸ் அல்லது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

Disclaimer: The information in this article is for educational purposes only and should not be considered medical advice. Consult your doctor before making any dietary changes, especially if you have diabetes or other health conditions.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry