“என்னை கொல்ல சதி நடந்தது”..! ஏடிஜிபி கல்பனா நாயக் பரபரப்பு புகார்! ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று இபிஎஸ் கேள்வி!

0
87
In a shocking development, Tamil Nadu ADGP Kalpana Nayak has filed a complaint with the DGP, claiming that there is a conspiracy to kill her. This has raised serious concerns within the Tamil Nadu police force and beyond.

ஏடிஜிபி கல்பனா நாயக் ஐபிஎஸ் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் அளித்த புகார் மனுவில், தன்னை கொலை செய்ய சதி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Also Read : வாழ்க்கையில் எளிதாக வெற்றிபெற வேண்டுமா? உங்களுக்கு கைகொடுக்கும் காலை நேர பழக்கவழக்கங்கள்!

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி அறையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

In a complaint addressed to Tamil Nadu Director General of Police and Head of Police Force Shankar Jiwal, senior IPS officer Kalpana Nayak called for an “unbiased” investigation into a fire that gutted her chamber in Chennai on July 29, 2024. Photo: The Hindu.

சம்பவத்தன்று தேர்வாணைய தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும்போது மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தீ விபத்து குறித்து தகவல் அளித்ததாகவும், தனது அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது தனது இருக்கை முழுவதுமாக எரிந்து கிடந்ததாகவும் புகாரில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தான் புகார் தெரிவித்த நிலையில், இந்த தீவிபத்து நடந்ததாகவும் ஏடிஜிபி கல்பனா நாயக் சந்தேகம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாகப் பணிபுரிந்து வருகிறார்.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

“சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்” என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது. தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது, இந்த செயலுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா? இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, ஸ்டாலின் தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி!

இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். ஏடிஜிபி கல்பனா நாயக் ஐபிஎஸ்-க்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும். உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக்கின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry