கோவிட்-19 பேரிடரை மேலும் சிக்கலாக்கும் கருப்பு பூஞ்சை நோய்! பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன?

0
69

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிரித்து வரும் சூழலில், கருப்பு பூஞ்சை நோயும் அச்சுறுத்து தொடங்கி இருக்கிறது. பிளாக் ஃபங்கஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? அறிகுறிகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு பெருமளவுக்கு இருக்கும் நிலையில், புதிதாக  மியூகோமிகோசிஸ்அதாவது கருப்பு பூஞ்சை என்ற நோய் அச்சுறுத்தத் தொடங்கி இருக்கிறது. இது, கொரோனா தொற்றாளர்கள், தொற்றில் இருந்து விடுபட்டவர்கள் மற்றும் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களை பாதிக்கிறது.

மியூகோமிகோசிஸ் என்றால் என்ன

இது பூஞ்சையால் ஏற்படும் தொற்று ஆகும். நம்மை சுற்றி பூஞ்சைகள் உற்பத்தியாவது இயற்கை. இதில் துகள்கள் நிறைந்து இருக்கின்றன. எல்லோருக்கும் உடலில் அவை தொற்றை உண்டாக்குவதில்லை. ஏனெனில் உடலில் இருக்கும் எதிர்ப்பு ஆற்றல் இதை உள்ளே விடுவதில்லை. ஆனால் பிளாக் ஃபங்கஸ் எனப்படும் மியூகோமிகோசிஸ் பெரிய அச்சுறுத்தலாக உள்ளதுஏனெனில் இது முகச் சிதைவை ஏற்படுத்துகிறது.

பிளாக் ஃபங்கஸ் அறிகுறிகள் என்ன

மூக்கடைப்பு, மூக்கின் வழியே கறுப்பாகவோ, ரத்தமாகவோ திரவம் வெளியேறுவது, கன்ன எலும்புகளில் வலி உண்டாவது, வீக்கம், கன்னத்தில் இருக்கும் எலும்புகளில் உள்ளூர வலி, ஒரு பக்க முகத்தில் வலி அல்லது உணர்வின்மை போன்றவை மியூகோர்மைசிஸ் நோய்க்கான முதன்மை அறிகுறி

  • உணர்வின்மை, வீக்கம் போன்றவையும் இதன் அறிகுறிகள்தான். சிலருக்கு மூக்கிற்கும், மேல்வாய்க்கும் இடைப்பட்ட பகுதி கறுப்பாக மாறும். சிலருக்கு பல் வலி அதிகமாக இருக்கும். கண் மங்கலாக இரட்டையாக தெரிவது, காய்ச்சல் போன்ற நிலையும் உண்டாகும். மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிடவையும் இதன் அறிகுறிகளே.
  • பூஞ்சை அச்சுகள் பாதிப்பை எதிர்கொள்ளும் போது சைனஸ் குழிகள் மற்றும் நரம்புகளை தாக்கும் போது பூஞ்சை தொற்று தீங்கை உண்டாக்கும். இது ஒரு நபருக்கு தொடர்ச்சியான வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.
  • கறுப்பு பூஞ்சை பார்வை குறைபாட்டையும் உண்டாக்கும். சிலர் ஒரு கண்ணில் ஒரு வித வீக்கத்தை அனுபவிக்கலாம். இதனால் பார்வை மங்கலாகும். சிலருக்கு கண்கள் ரத்தச் சிவப்பாக மாறும்.

 யாரை அதிகமாக பாதிக்கிறது

  • நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த நிலையில் இருப்பவர்கள் தான் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். கேன்சர், ஹெச்..வி பாதிப்புகளுக்கு தீவிர சிகிச்சை எடுப்பவர்களை இது தாக்குகிறது.
  • கொரோனா தொற்று தீவிரமாகும் போதும் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. சாதாரண அறிகுறிகளுடன் கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு இந்த கறுப்பு பூஞ்சை தொற்று உண்டாகும் வாய்ப்பு மிகவும் குறைவும்.
  • கொரோனா தொற்று இல்லாமல் மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்களுக்கும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைப்பதற்கான மருந்துகளை எடுத்துகொள்பவர்களையும் இந்த பூஞ்சை தாக்குகிறது.

இந்த வகையான பூஞ்சை பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. தற்போது மஹாராஷ்ட்டிராவில் பிளாக் ஃபங்கஸ் பாதிப்பு அதிகரிகக்க துவங்கி இருப்பதால், அதை கட்டுப்படுத்துவற்கான மருந்து உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் கறுப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry