முன்களப் பணியாளர்களா? இல்லையா? குழப்பத்தில் ஊடகத்துறையினர்! உடனடியாக அரசாணை வெளியிட கோரிக்கை!

0
15

தமிழகத்தில் ஊடகத் துறையினர் அனைவருமே முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணை வெளியிடாதது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. 2வது அலை தீவிரமாக உள்ள இந்தச் சூழலிலும் உயிரைப் பணயம் வைத்து ஊடக துறையினர் செய்தி சேகரித்து வருகின்றனர். தொற்று காரணமாக பலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. நான்கு நாட்களில் 5 பத்திரிகையாளர்களை தமிழகம் கொரோனாவுக்கு பலிகொடுத்திருக்கிறது.

பத்திரிகையாளர்களை, ‘முதல்நிலை பணியாளர்கள்’ என, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மமதா ஆகியோர் பாராட்டியுள்ளன. மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அ நிலையில், “ஊடகத் துறையினர் அனைவருமே முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்குரிய உரிமைகள், சலுகைகள் உரிய முறையில் வழங்கப்படும்” என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால் இந்த அறிவிப்பு, டிவிட்டர் பதிவோடு நின்றுவிட்டதாக பத்திரிகையாளர்கள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர். ஏனெனில், “பத்திரையாளர்கள் முன்களப் பணியாளர்கள் என்பதற்கான அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை. வெறும் அறிவிப்பை வைத்துக்கொண்டு எங்களால் என்ன செய்ய முடியும்? அரசாணை வெளியிட்டிருந்தால், அதனை ஊடகங்களிடம் வழங்காமல் இருப்பது ஏன் என்பதும் தெரியவில்லை?

இந்த அறிவிப்பில் பல குழப்பங்கள் இருக்கின்றன. அரசு அங்கீகார அட்டை (Accredidation Card) வைத்திருப்பவர்கள் மட்டும் முன்களப் பணியாளர்களா? அல்லது, நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்களா? அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் என்னென்ன என்பதை அரசு வரையறுத்துள்ளதா?

பத்திரிகையாளர்களுக்கு சிகிச்சையில் முன்னுரிமை தரப்படுமா?, செய்தி சேகரிக்கச் சென்று பெருந்தொற்றால் உயிரிழக்க நேரிடும் குடும்பங்களுக்கு அரசு எவ்வளவு நிதி உதவி செய்யப்போகிறது? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் ஐந்துபேரின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது? அரசாணை வெளியிட்டால் மட்டுமே இத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry