இரவில் செல்ஃபோனே கதி என்று கிடப்பவரா? கண்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? ‘வேல்ஸ் மீடியா’ சிறப்புப் பார்வை!

0
26

மொபைல், லேப்டாப் போன்றவை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் வந்துவிட்ட இந்த காலத்தில், ஆன்லைன் வகுப்புக்காக பிள்ளைகள் அதிகம் மொபைல் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதேபோல், தூக்கத்தை தள்ளிவைத்துவிட்டு மொபைல் ஃபோனை பயன்படுத்துவர்களும் அதிகம். அவர்களுக்கான பிரத்யேகக் கட்டுரைதான் இது.

சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஆன் லைன் வகுப்புகள், Work from Home என்ற பெயரில் கூடுதல் வேலை செய்ய வேண்டியுள்ளது. இவையெல்லாம் முடிந்தபிறகும் மொபைல் ஃபோனே கதி என்று பலரும் கிடக்கிறார்கள். அலுவலக வேலை என்று சொல்லி நாள் முழுவதும் கணினியை பயன்படுத்தி விட்டு, அதன்பின் தொலைக்காட்சியைப் பார்ப்பது, மொபைல் ஃபோனில் உரையாடுவது மற்றும் இணையதள விளையாட்டுகளை விளையாடுவது என, நம்முடைய கண்களுக்கு ஓய்வில்லாமல் வேலை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். இது Digital Addiction என வகைப்படுத்தப்படுகிறது.

இரவு நேரத்தில் வீட்டில் பயன்படுத்தும், நீல நிறை ஒளியை உமிழும் எல்..டி. விளக்குகளும், செல்ஃபோன், லேப்டாப் போன்றவையும் தூக்கத்தின் முக்கிய எதிரிகளாகும். இதைத் தவிர்க்க தூங்குவதற்கு 2 அல்லது மூன்று மணி நேரத்துக்கு முன்னால் எல்லாவித ஒளித்திரைகளையும் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இது சாத்தியமில்லை என்றால், இரவு நேரங்களில் அதிக நேரம் லேப்டாப், மொபைல் ஃபோன், டிவி பயன்படுத்துவோர், திரைகளில் இருந்து வரும் நீல வெளிச்சத்தை மட்டுப்படுத்தும் Blue Light Blocking கண்ணாடிகள் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீல ஒளி தடுப்பு கண்ணாடிகளை அணியும்போது, கணினிகள் வெளியிடும் நீல ஒளி நம் கண்களுக்குள் செல்வது தடைபடும். இதன் காரணமாக கண்கள் பாதுகாக்கப்படும். கண்ணாடி தேவைப்படுவோர் கீழே உள்ள லிங்க் மூலமும் வாங்கலாம்.

மொபைல் போனில் உள்ள, நீல நிற ஒளியிலிருந்து வெளிப்படும் சில வேதி விளைவுகள், கண்ணில் உள்ள விழித்திரையை பாதித்து, சில சிதைவுகளை ஏற்படுத்துவது, ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது. ஒரு சிலர் வீட்டிலேயே இருக்கும் நிலை இருப்பதால், இரவில் தூக்கம் இல்லாமல் கண் விழித்துக் கொண்டே இருப்பது போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கண்களை வலுவாக்க வீடியோவில் உள்ளதுபோன்ற சில எளிய பயிற்சிகளையும் செய்வதும் அவசியமாகும்

Also Watch : கண்ணுக்கு கெடுதல் இல்லாம Online Class- Yoga for Your Eyes

ஒரு நாளில் இரவுப்பகுதி தூக்கத்திற்கானது. இரவில்தான் சேதமான செல்களை மூளையானது சரிசெய்யும். சூரிய ஒளியின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு சுரக்கும் மெலடோனின் (Melatonin) ஹார்மோன், பகலுக்கும் இரவுக்கும் நம்மைத் தயார்படுத்துகிறது. சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கண்களில் நாம் பெறும் வெளிச்சம்தான் தூக்கத்துக்கான முதல் எதிரி. இந்த வெளிச்சம் மெலடோனின் ஹார்மோன் சுரப்பை தடுத்து பல உபாதைகளை ஏற்படுத்துகிறது.

நாள் முழுவதும் வேலை செய்யும் நபர்களின் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இதற்கு 20/20 விதியை பின்பற்ற வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடி தூரத்தில் உள்ள பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும். அப்போது, கண்களில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் ஆகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry