பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய வரைபடத்தை திருத்திய திமுக! தமிழ் ஊடகத்தில் முதன்முறையாக அம்பலப்படுத்தும் ‘வேல்ஸ் மீடியா’!

0
39

தாங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான கட்சிதான் என்பதை திமுக மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. அக்கட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ இந்திய வரைபடத்தில், பாகிஸ்தான், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு காணப்பட்டது

கடந்த 11-ந் தேதி (Nov 11 2020), இந்திய வரைபடத்துடன் கூடிய பிரச்சார வீடியோ ஒன்றை, திமுக சமூக வலைதளங்களில் வெளியிட்டது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அந்த வீடியோவை போஸ்ட் செய்திருந்தார். உதயநிதியின் டிவிட்டர் பக்கத்திலும் அது பதிவிடப்பட்டது. அந்த வீடியோவில் இடம்பெற்ற இந்திய வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீனா ஆக்கிரமித்துள்ள லடாக் பகுதிகள் இடம்பெறவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரும், இளைஞரணி துணைத் தலைவருமான எஸ்.ஜி. சூர்யா, இதை சுட்டிக்காட்டி, திமுகவின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து டிவிட்டரில் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும், சீனா ஆக்கிரமித்துள்ள லடாக்கும் இந்திய பகுதிகள் இல்லை என்பதுதான் திமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல, தாய்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் அளவுக்கு, பாகிஸ்தானுடன் தனிப்பட்ட உறவு உள்ளதா? என்பதை உதயநிதி விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்

திமுகவின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்திய இந்த டிவிட்டர் பதிவு, தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் வைரலானது. இந்த விவகாரத்தை என்... உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் பதிவிட்டனர்.

இதையடுத்து, தீபாவளியன்று (14.11.2020) ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் இருந்து அந்த வீடியோக்களை திமுக நீக்கியது. ஆனால், தாங்கள் வெளியிட்ட இந்திய வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீனா ஆக்கிரமித்துள்ள லடாக் பகுதிகள் ஏன் இடம்பெறவில்லை என்பது குறித்து திமுக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக திமுக செயல்படுவது இது முதல் முறையல்ல. ஜம்முகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசு வானொலி நிலையம் தனது டிவிட்டர் பக்கத்தில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க போராட்டத்தை அறிவித்துள்ளதுஎன பதிவிட்டது.

இந்தியாவுக்கு எதிரான, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை, திமுக அவ்வப்போது வெளிப்படுத்தி வருவதை இதன் மூலம் உறுதிபடுத்திக் கொள்ள முடியும் என வலதுசாரி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்திய வரைபடத்தை திமுக தவறாக வெளியிட்டுவிட்டது என இதை கடந்துவிட முடியாது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீன ஆக்கிரமிப்பு லடாக் பகுதிகள் கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry