தமிழகத்தில் அகதிகளாகும் அந்தணர்கள்! உதவி கிடைக்காமல் பரிதவிக்கும் ஏழை பிராமணர்கள்! – பாகம் – 3

0
141

தமிழகத்தில் அந்தணர்கள் அகதிகளாக்கப்பட்டு வருகிறார்கள். மற்ற சாதிகளைப்போலவே பிராமண சமூகத்திலும் பரம ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

2500 ஆண்டுகளுக்கு முன்பு வேதகாலத்தில் பிராமணர்கள் பலமிக்கவர்களாக, அதிகாரம் பொருந்தியவர்களாக இருந்துள்ளனர். 500BC-ல் பெளத்தம் உருவானபிறகு, பிராமணர்கள் செல்வாக்கும், அதிகாரமும் இழந்தனர். பெளத்த மதத்துக்கும் மாற்றப்பட்டனர். 8-ம் நூற்றாண்டு வரை இதுபோன்றதொரு சூழல் நிலவிய நிலையில்தான், சங்கராச்சாரியார் வேத மதத்துக்கு புத்துயிரூட்டினார்.

பின்னர் வேத மதம் தழைத்த நிலையில், மொகலாயர்கள் மற்றும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடிமைப்பட நேரிட்டது. இந்தக் காலம் தொட்டு, சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பிராமணர்கள் அதிகாரம் இழந்தவர்களாகவே உள்ளனர். அதாவது, அரசியல், பொருளாதாரம் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மொகலாய அரச வம்சத்திடமும், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நிர்வாகிகளிடம் இருந்தது. எனவே, தற்போதைய ஏழ்மைக்கும், சமமற்ற சமூக நிலைக்கும் காரணம் மொகாலயர்களும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுமே என்பதை மறுக்க முடியாது. ஆனால் தற்போதைய சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் பிராமணர்களே அதாவது அந்தணர்களே காரணம் என இந்து மத வெறுப்பாளர்கள் பிரச்சாரம் செய்வதைக் காணலாம்.

வேத நாகரீகத்தைச் சேர்ந்த அந்தணர்கள் இல்லாவிட்டால், Persian, Greek, Egyptian, Roman போன்று இந்து மதமும் அழிந்து போயிருக்கும். பொதுவாகவே இந்து மதத்தை சார்ந்த பெரும்பாலான சாதியினர், நாட்டை மற்றும் மத்தத்தை காக்க வலிமையோடு போராடுவதைப் பார்க்கலாம். (பசும்பொன் தேவர் பெருமகனாரின், ‘தேசியமும், தெய்வீகமும்’ என்ற முழக்கத்தை இதற்கு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்)

அந்தணர்கள் இந்து கலாச்சாரத்தைக் காக்கவும், வேத தர்மத்தை காக்கவுமே எத்தனிப்பார்கள், மெனக்கெடுவார்கள். கலாச்சாரமும், வேதமும் காப்பாற்றப்படும்போது, இந்து மதத்தை அழிப்பென்பது இயலாத காரியம். எனவேதான், ஆதிகாலம் தொட்டு, இந்தக் காலம் வரையிலும், இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களின் முதல் குறியாக அந்தணர்கள் இருக்கிறார்கள். தமிழின் பெயரால் அந்தணர்களை பிரித்தாளுபவர்கள், உ.வே. சாமிநாதய்யர், பரிதிமாற் கலைஞர் எனப்படும் சூரியநாராயண சாஸ்திரி உள்ளிட்டோரை இருட்டடிப்பு செய்வதைக் காணலாம்.

மொகலாய ஆட்சியாளர்களால், இந்தியாவில் இந்துக்கள், பெளத்தர்கள், ஜைனர்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டார்கள் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அப்படியானால், 1900-த்தின் முற்பகுதியில் பிராமணர்கள் மற்ற சாதியினரை அவமதிக்கவில்லையா? என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். அது உண்மையே, அதை ஏற்கவோ, அங்கீகரிக்கவோ முடியாது. ஆனால், தற்போது அந்தணர்களில் பெரும்பாலானோர், சாதி ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை என்பதே நிதர்சனம். அதுமட்டுமல்ல, அந்தணர்கள் ஒருபோதும், ஆணவக் கொலையோ, இனப் படுகொலையோ செய்தது கிடையாது.

இது இந்திய நிலைமை என்றால், 1930-ல் ஜெர்மனியில் யூதர்கள் எப்படி இருந்தார்களோ அப்படித்தான் தமிழ்நாட்டில் அந்தணர்கள் இருக்கிறார்கள். சாதி சிறுபான்மையினரான அந்தணர்கள்தான் மாநிலத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று முத்திரை குத்தப்படுவார்கள். அதாவது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிராமணர்கள்தான் பலிகடா. இந்து மத எதிர்ப்பாளர்கள், கம்யூனிஸ்டுகள், சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அந்தணர்களை விமர்சிக்காவிட்டால் தூக்கமே வராது.

பெரியாரியம், அம்பேத்கரியம் என்ற கருத்தியலில் இயங்கும் பெரு ஊடகர்களும், சமூக ஊடகங்களிலும், அந்தண வெறுப்பு பரப்பப்படுவதை அனைவரும் அறிவார்கள். இதன் நீட்சியாகத்தான் பிராமணர்கள் பலர் தங்களது அடையாளத்தை மறைத்துக் கொள்கின்றனர். ஒற்றுமை இழந்து பிரிந்து கிடக்கும் பிராமணர்கள், சக பிராமணர்களுக்கு உதவக்கூட தயாராக இல்லை என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம்.

Also Read 1: உச்சம் பெறும் பிராமண வெறுப்பு அரசியல்! பார்ப்பனர்களுக்கு எதிராக அதிகரிக்கும் ஊடகத் தீவிரவாதத் தாக்குதல்! பாகம்-1
Also Read 2: ஒற்றுமை இழந்த பிராமணர்கள்!  அந்தணன் எனக் கூறவே அசிங்கப்படும் அவலம்! பாகம் – 2

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பிராமணர்கள், அதாவது, அந்தணர்களின் ஆதிக்கத்தை அகற்றும் பணி 1920-களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. அப்போதே சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்றவற்றை பிரிட்டிஷார் தொடங்கிவிட்டனர் (அதுமுதல் இதுவரை பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை, சிறப்பு மானியம் கிடையாது). ஆனால், தற்போது, சமூக நீதி என்ற பதத்தை பயன்படுத்துவோர், முதலில் வசைபாடுவது அந்தணர்களைத்தான். மற்ற அனைத்து சாதியினரும் சமூக நீதியை 100% நிலைநாட்டி விட்டது போலவும், அந்தணர்கள் மட்டுமே தீண்டாமை பாராட்டுவதாகவும் அவர்கள் கூறுவார்கள். ஆனால், பட்டியலினத்துக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு இருப்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுவார்கள், மறைத்துவிடுவார்கள்.

பிராமண எதிர்ப்புப் பிரச்சாரம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு உள்ளதால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சாதி சிறுபான்மையினரான அந்தணர்கள் அகதிகளைப் போலத்தான் வாழ்கிறார்கள். அந்தணர்கள் 90 சதவிகிதம் பேர் நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் ஏழைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான அரசு சலுகையோ அல்லது இட ஒதுக்கீடோ கிடையாது, அரசியல் பிரதிநிதித்துவமும் கிடையாது அல்லது கிடைக்காது. கிராமக் கோயில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள் இன்னமும் நிலையான வாழ்வாதாரமின்றி தவிக்கிறார்கள். பொருளாதாரத்திலோ அல்லது உயர் பதவியிலோ வலுவாக உள்ள 10 சதவிகித அந்தணர்கள், சக பிராமணர்களுக்கு எந்த வகையிலும் உதவ மாட்டார்கள். இதை பிராமண சமூகத்தின் சாபக்கேடு என்றே சொல்லலாம்.

தன்னலமற்றவன்தான் பிராமணனாக கற்பிக்கப்படுகிறான். ஆனால், தற்போதோ, அறிவு ஜீவிகளாக கருதிக்கொள்ளும் ஒரு பகுதி பிராமணர்களை, சுயநலம் ஆட்டுவிக்கிறது. இவர்கள்தான் ஆளும்சக்திக்கு இணக்கமாக இருப்பார்கள். ஆனால், தனது அதிகாரத்துக்கு உட்பட்டுக்கூட சக பிராமணர்களுக்கு எதையும் செய்ய மாட்டார்கள். பிராமணர்களுக்கு என்று சில சங்கங்கள் உள்ளன. ஆனால், அவை அசிங்கங்களாகவே உள்ளன.

அந்தர்ணர்க்கு ஒரு பிரச்சனை எனும்போது, பாஜக-வினரோ, டாக்டர் கிருஷ்ணசாமி, அர்ஜுன் சம்பத் போன்றவர்களோதான் குரல் கொடுப்பார்கள். ஆனால், இந்த சங்கங்கள் மவுனித்தே இருக்கும். நீட் தேர்வு கூடாது என்பதற்குக்கூட அரசியலாளர்களுக்கு பிராமண சமூகம் தேவைப்படுகிறது. அரசின் சலுகைகள் முற்றாக மறுக்கப்பட்டுள்ள நிலையில், சுயமாக முன்னேறும் அல்லது நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவம் போன்ற படிப்பில் சேரும் பிராமண மாணவர்கள் மீது கூட வெறுப்பு விதைக்கப்படுகிறது. நமக்கு ஏன் வம்பு என்ற மனோநிலை மாறாத வரை, பிராமணர்கள் கைபர்போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள்தான் என்ற புரட்டு உண்மையாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

பத்திரிகையாளர் ‘கோ’

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry