உச்சம் பெறும் பிராமண வெறுப்பு அரசியல்! பார்ப்பனர்களுக்கு எதிராக அதிகரிக்கும் ஊடகத் தீவிரவாதத் தாக்குதல்! பாகம்-1

0
168

தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு எதிராக பரவலாக இருந்து வந்த வெறுப்பு அரசியல் அதிகரித்துவிட்டது. பெரும்பாலான பெரு ஊடகங்களும் பிராமண சமூகத்துக்கு எதிரான வெறுப்புணர்வை விதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பிராமணர்களை இழிவுபடுத்தும், தனிமைப்படுத்தும் வேலைகள், கடந்த ஒரு மாதமாக கனகச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்துக்களிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் இந்தப் பணியை செய்வது யாரென்றால், அடிமைகளாகவே இருக்கிறோம், இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம் என ஆங்கிலேயர்களிடம் கூறிய பெரியாரியவாதிகள்

அரை நூற்றாண்டுகளாக, பெரியாரிய, அம்பேத்கரிய மற்றும் இடதுசாரிகள், பிராமண எதிர்ப்பை மையமாக வைத்து மட்டுமே அரசியல் செய்கின்றனர். அரசியல் லாபத்துக்காக தமிழ்நாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சியை அழைத்து வந்து அங்கீகாரம் கொடுத்ததே திமுகதான். பின்னர் பாரதிய ஜனதா வேண்டாம் என்றான பிறகு, அக்கட்சிக்கு பார்ப்பன முத்திரை குத்தப்பட்டது.

பாஜக என்றாலே பார்ப்பனர்கள் கட்சி, சனாதானத்தை பின்பற்றுபவர்கள் என இந்து மத மறுப்பாளர்கள் செய்த பிரச்சாரத்தை, ஊடகங்களில் 99 சதவிகிதம் வியாபித்துள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிஸ சித்தாந்தவாதிகள், மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, மக்களிடம் அச்சுபிசகாமல் கொண்டு சேர்த்தனர்

உளவியல் ரீதியாக இதைப் பார்த்தோமேயானால், தனக்கு அறிவு இல்லை என்றால், கேட்பவற்றை எல்லாம் அறிவு என மனித மூளை நினைத்துக்கொள்ளுமாம். அதாவது, ஒரு தகவல், அது சரியோ? தவறோ?, திரும்பத் திரும்ப மூளைக்கு அனுப்பப்படும்போது, அதையே அது அறிவாக மாற்றிக்கொள்ளும். அப்படித்தான், பாரதிய ஜனதா என்பது பார்ப்பனக் கட்சி என்ற தவறான தகவலை திரும்பத் திரும்பச் சொல்லி, தமிழ்நாட்டு பெரும்பாலான ஊடகங்கள் மக்களிடம் ஒருவித பிம்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ளன.

ஏற்கனவே பிராமண வெறுப்பு தலைதூக்கியிருக்கும் தமிழகத்தில், பாரதிய ஜனதாவை எதிர்க்க வேண்டுமென்றால், பிராணர்களையும் எதிர்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும் என்ற உளவியலை ஊடகங்கள் கட்டமைத்துவிட்டன. எனவேதான், தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட சதவிகித இந்துக்களாலும், இஸ்லாமிய, கிறித்தவர்களாலும், பிராமண எதிர்ப்பும், பாரதிய ஜனதா எதிர்ப்பும் சம அளவில் வைத்தே பார்க்கப்படுகின்றன. இதனால் பிராமணர்களுக்கு எதிரான விமர்சனம் மீண்டும் பெருமளவு அதிகரித்துவிட்டது.

உண்மை என்னவென்றால், பார்ப்பனர்களில் பெரும்பாலானோர் மதப்பற்றாளர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் பாரதிய ஜனதாவை ஏற்பவர்களா? என்றால் இல்லை. இதற்கு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலே சாட்சி. எனவே, பாரதிய ஜனதா கட்சி என்பது பார்ப்பனர்களுக்கானது என்ற தவறான கற்பிதம் இதன் மூலம் தெளிவாகிவிட்டது.

செய்தியை பகுத்தாய்ந்து அறிய, மக்கள் பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு செய்தி என்பது, உங்கள் அறிவை மேம்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும், சூழ்நிலையை கையாளும் திறனை மேம்படுத்தும் தகவலை தருவதாக இருக்க வேண்டும் அல்லது சூழ்நிலை குறித்து முன்கூட்டியே எச்சரிப்பதாக இருக்க வேண்டும்.  ஆனால், பிராமண வெறுப்பு,  பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிஸ சித்தாந்த ஆதரவு என்ற இரண்டை மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்களில் பணியாற்றும் நெறியாளர்கள், ஊழியர்கள் பின்பற்றுவது துரதிருஷ்டம். அவர்கள் சொல்வதைத்தான் மக்கள் கேட்க வேண்டும், பார்த்தாக வேண்டும் என்ற உளவியல் தாக்குதல், ஒருவகையில், ஊடகத் தீவிரவாதமே!

(கலாசாரத்தை, ஒற்றுமையை, அடையாளத்தை தொலைத்த பிராமணர்கள்பாகம்-2)

-பத்திரிகையாளர்கோ

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry