திரையரங்குகள் முழுப் பார்வையாளர்களுடன் இயங்க தடை விதிக்க வேண்டும்! உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு!

0
4

தமிழகத்தில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ““தற்போது தொடர்ச்சியாக திருவிழா காலமாக இருப்பதால், கொரோனா நோய் தடுப்பு வழி முறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளது.  தமிழகம் இன்னும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை.

இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது கொரோனா தொற்று பரவலை அதிகரிக்கவே செய்யும். திரையரங்கங்கள் 100% இருக்கைகளுடன் இயங்கும் போது பார்வையாளர்கள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே இருக்கும். கொரோனா முதல் அலையின்போது, மாஸ்டர் பட வெளியீட்டில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் மீறப்பட்டதாக 50-க்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டன.

தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி எனிமி, வா டீல் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளன. இது கொரோன பரவலுக்கு காரணமாக அமையும். எனவே, சினிமா திரையரங்குகள்ள், 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், நவம்பர் 3, 4 தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிட வேண்டும்என அவர் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry