தோனி அழுத்தத்தால் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டாரா? முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பாட்டீல் சரமாரி கேள்வி?

0
34

உடற் தகுதியில்லாத ஹர்திக் பாண்டியாவை அணியில் தேர்வு செய்தமைக்கு ரவி சாஸ்திரி உள்ளிட்ட யாராவது பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பாட்டில் வலியுறுத்தி உள்ளார்.

தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீச முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். கடந்த ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து இந்திய அணியில் பாண்டியா இடம் பெற்றும் எந்தப் போட்டியிலும் மேட்ச் வின்னிங் ஆட்டம் ஆடவில்லை, பந்துவீசவும் இல்லை. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றும் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசவில்லை.

ஆனாலும், ஆல்ரவுண்டர் வரிசையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், தோள்பட்டையில் அடிவாங்கி ஃபீல்டிங் செய்யவில்லை. ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காயம் ஏதும் இல்லை எனத் தெரியவந்தது. இந்நிலையில் சர்வதேச போட்டியில் விளையாடும், வீரர் ஒருவர் 100% உடற் தகுதியில்லாத நிலையில், அணிக்கு எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் எழுதியுள்ள சந்தீப் பாட்டீல், “100 சதவீதம் உடற் தகுதியில்லாத ஒரு வீரரை எவ்வாறு உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் தேர்ந்தெடுத்தார்கள்களமிறங்கும் 11 பேரில் பாண்டியா தேர்வு செய்யப்படது, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ ஆகியோருக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். அடிப்படையில் ஒரு வீரர் 100 சதவீதம் உடற்தகுதி இல்லாவிட்டால், அதை தேர்வாளர்களிடம் விட்டுவிடவேண்டும்.

ஐபிஎல் முழுவதும் பாண்டியா பந்து வீசாததால், தேர்வுக் குழுவினர் அது குறித்து விவாதித்திருக்க வேண்டும். அவரிடம் உடற் தகுதிச் சான்றைக் கேட்டிருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு யாரேனும் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை ரவி சாஸ்திரியிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. போட்டியின் போது உடல் தகுதி இல்லாத ஒருவரை, எந்த அடிப்படையில் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக தேர்வு செய்தார்கள்? பாண்டியா உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோர் சொல்கிறார்கள்.  இது உலகக் கோப்பை, சாதரணத் தொடர் அல்ல, அல்லது போட்டியும் அல்லஇவ்வாறு சந்தீப் பாட்டல் தெரிவித்துள்ளார். இதே கேள்விகளை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்கசர்கரும் எழுப்பியுள்ளார்.

ஆனால், பாண்டியாவை தேர்வு செய்ய தேர்வுக்குழு விரும்பவில்லை என்றும், ஆட்டத்தை சிறப்பாக முடித்துத்திறன் கொண்டவர் என்ற தனது நம்பிக்கையின் அடிப்படையில், அணியின் மென்டாரான எம்.எஸ். தோனி, பாண்டியாவை தேர்வு செய்யச் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

இதனிடையே, கடந்த 2 நாட்களாக ஹர்திக் பாண்டியா பந்துவீசி பயிற்சி எடுத்து வருகிறார். அதற்குரிய வீடியோ காட்சிகளை பிசிசிஐ தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியா, நியூஸிலாந்து ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாகும். இதை கவனத்தில் கொண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry