இஸ்லாமிய அமைப்பின் பிடியில் மாணவிகள்! ஹிஜாப் சர்ச்சையின் பகீர் பின்னணி! இந்துக்கள் நேபாளம் செல்ல வலியுறுத்தல்!

0
394

கர்நாடக ஹிஜாப் சர்ச்சைக்குப் பின்னால், மிகப்பெரிய சதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இதில் முக்கிய பங்காற்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இடதுசாரி மற்றும் பெரியாரிய சித்தாந்த ஊடகங்கள் அவர்களது பிரச்சாரத்துக்கு பெரிய அளவில் உதவுவதும் அம்பலமாகியுள்ளது

கடந்த ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில், Popular Front of India அமைப்பின் மாணவர் அமைப்பான Campus Front of India கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஹிஜாப் சர்ச்சையை தொடங்கிய நான்கு மாணவிகள், அக்டோபர் மாதத்தில், டிவிட்டர் கணக்கு தொடங்கியுள்ளனர். சாம்பியன்ஸ் என்ற ஹேஷ்டேக் மூலம் அந்த நான்கு மாணவிகளும் CFI எனப்படும் Campus Front of India அமைப்பின் கொள்கைகளை, நோக்கங்களை பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், ஹிஜாப் அணிவது உரிமை, அதை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு கூறிய ஒரு மாணவி, தாங்கள் CFI உறுப்பினர்கள் அல்ல, ஹிஜாப் சர்ச்சைக்குப் பிறகுதான் அந்த அமைப்பினர் தொடர்பு கொண்டார்கள் என்று கூறியுள்ளார். அந்த மாணவிகள் உண்மையை மறைப்பது இதன் மூலம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. ஏனென்றால், அவர்களது டிவிட்டர் பதிவுகளே உண்மையை கூறுகின்றன. அவர்கள் டிவிட்டர் கணக்கு தொடங்கியதில் இருந்தே CFIக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதியே CFI தொடங்கிய Champion ஹாஷ்டேக்கில் அவர்கள் பதிவுகளை இடத்தொடங்கிவிட்டனர். அந்த ஹேஷ்டேக்கானது மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரானது. இதை முஸ்கான் என்ற மாணவியின் டிவிட்டர் ஹேண்டலில் காணமுடியும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி பாபர் மசூதி விவகாரத்தை அடிப்படையாக வைத்து CFI ஹேஷ்டேக் பிரச்சாரத்தை தொடங்கியது. அதை மறுபதிவு செய்யும் இந்த மாணவிகளின் மொழியாள்கையை உற்று நோக்க வேண்டும். CFI அமைப்பின் தலைவரும் Champion என்ற அந்த ஹேஷ்டேக்கில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த போஸ்டரையும் நாம் பார்க்க முடியும்.

CFIன் அடுத்த ட்விட்டர் பிரச்சாரம் 11 நவம்பர் 2021 அன்று மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பற்றியதாக உள்ளது. வாட்ஸ் அப் குரூப் மற்றும் டூல் கிட் மூலம் ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்துவதற்கான பிரச்சாரத்தில் அந்த மாணவிகளும் பங்கேற்றுள்ளனர்.

அடுத்ததாக 19 நவம்பர் 2021-ல், கர்நாடக அரசை எச்சரிக்கும் விதமான பதிவுகளை காணமுடிகிறது. பின்னர் 21 நவம்பர் 2021-ல் CFI மாநில தலைவர், பள்ளிவாசல்களில் ஒலிப்பெருக்கி மூலம் தொழுகைக்கு அழைப்பதை குறிக்கும் அஸான் என்பதை பற்றி பதிவிடுகிறார். இவை அனைத்துமே டூல்கிட் மூலமாக பிரச்சாரமாக முன்னெடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்து மதத்தினரை விமர்சிப்பதாகவும் உள்ளது.

CFI டூல்கிட் அல்லது வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படும் பதிவுகளை, ஹிஜாப் சர்ச்சையை கிளப்பிய மாணவிகள் அப்படியே காப்பி செய்து டுவிட்டரில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதில் சங்கி என்ற வார்த்தையும், இந்துக்கள் நேபாளத்துக்கு செல்லுங்கள் என்ற வரியும் கவனம் ஈர்க்கிறது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

டிசம்பர் 12, 2021 அன்று, CFI அமைப்பைச் சேர்ந்த பல்வேறு குற்றப்பின்னணி கொண்ட ரவுஃப் ஷெரீஃப்க்கு ஆதரவான CFIன் டூல் கிட்டையும், பதிவையும் அந்த மாணவிகள் தங்கள் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளனர். CFI மற்றும் PFI அமைப்புகளால் இந்தப் பெண்கள் எந்த அளவுக்கு மத வெறி ஊட்டப்பட்டுள்ளனர் என்பதை அவர்களது பதிவுகளில் இருந்தே அறிய முடிகிறது.

இந்தப் பதிவுகளின் மூலம் குறிப்பிட்ட மாணவிகள் CFI உடன் தொடர்பில் இருந்ததும், ஹிஜாப் சர்ச்சைக்குப் பின்னரே அந்த அமைப்பு தங்களை தொடர்பு கொண்டதாக அவர்கள் கூறுவதும் பொய் என்று நிரூபணமாகியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ந் தேதி, CFI மாநிலக் கமிட்டி உறுப்பினர் மசூத் மன்னாவும், இந்த மாணவிகளும் ஹிஜாப் விவகாரத்தை கையிலெடுத்து கல்லூரி வளாகங்களில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

கடந்த மாதம் 1-ம் தேதி, The Wire உள்ளிட்ட இடதுசாரி மற்றும் இஸ்லாமிய ஊடகங்களில் பணியாற்றக்கூடிய மீர் ஃபைசல் என்பவர், அந்த மாணவிகளிடம் பேட்டி எடுத்துள்ளார். அடுத்த நாளே, அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். விவகாரத்தை பெரிதுபடுத்தி, அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல அவர்களுக்கு இது உதவுகிறது.   

பின்னர் கடந்த மாதம் 13-ந் தேதி, The Wire, The Quint உள்ளிட்ட இடதுசாரி மற்றும் இஸ்லாமிய ஊடகங்களில் பணியாற்றக்கூடிய ருஷ்தா ஃபாத்திமா கான் என்பவர் அந்த மாணவிகளை நேர்காணல் செய்கிறார். 19-ந் தேதி இடதுசாரி மாணவர் அமைப்புகளும், இடதுசாரி சித்தாந்தத்தில் இயங்கும் பிரபலமான என்.டி.டி.வி-யும் மாணவிகளுடன் கைகோர்க்கின்றன. 20-ந் தேதி ரபியா ஷிரீன் என்ற இடதுசாரி பத்திரிகையாளர் களத்துக்கு வருகிறார்.

இவ்வாறு படிப்படியாக இந்துக்களுக்கு எதிரான களத்திற்கு ஹிஜாப் விவகாரம் கொண்டு செல்லப்பட, தேசிய அளவில் இடதுசாரி ஊடகங்களம், தமிழகத்தில் பெரியாரிய ஊடகங்களும் முழு வீச்சில் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் தொடங்கின. INDEPENDENT AND PUBLIC-SPIRITED MEDIA FOUNDATION மூலம் நிதி பெறும் ஊடகங்கள் தீவிரமாக களமாடத் தொடங்கின. இதற்காகக் காத்திருந்த காங்கிரஸ் கட்சி, ஹிஜாப் பிரச்சாரத்திற்கான சட்ட  உதவிகளை செய்ய ஆரம்பித்தது.

Source: https://threadreaderapp.com/thread/1491728209200783360.html

PFI, CFI மட்டுமின்றி, இஸ்லாத்தை பரப்புவதற்காக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஜமாத்இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பும் ஹிஜாப் சர்ச்சையில் முக்கிய பங்கை ஆற்றி வருவதாக தெரிகிறது.

கர்நாடக அரசின் சீருடைக் கொள்கைக்கு எதிராக போராடும் இஸ்லாமிய மாணவிகளுக்கு CFI உடன் தொடர்பு இருப்பதாக ‘The News Minute’ இணைய இதழ் ஜனவரி 19, 2022 அன்றே செய்தி வெளியிட்டிருந்தது. டிசம்பர் மாதத்தில் இருந்துதான் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வரத் தொடங்கியதாக அந்த மாணவிகளும் கூறியுள்ளனர்.

நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது, ​​ஹிஜாபைத் தடைசெய்வதற்கான படிவத்தில் எங்கள் பெற்றோர் கையெழுத்திட்டார்கள் என்று நினைத்தோம், ஆனால் அவ்வாறு எந்த கையெழுத்தும் பெறப்படவில்லை என்பதை தெரிந்துகொண்டோம். எங்கள் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்தை மூன்று முறை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த பதிலும் வராததால் ஹிஜாப் அணிந்து செல்ல முடிவு செய்தோம். இது டிசம்பரில் (2021) நடந்தது,” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளில் ஒருவர் கூறியுள்ளார்.

Source: https://www.thenewsminute.com/article/its-our-right-wear-hijab-dont-bar-us-class-udupi-students-speak-160020

கடந்த ஆண்டு அக்டோபரில் RSS மாணவர் அமைப்பான ABVP சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் சில இஸ்லாமிய மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த PFI அமைப்பு, தனது மாணவர் அமைப்பான CFI-ஐ கல்லூரிகளில் முழுவீச்சில் இயக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

கல்விக்கூடங்களில் மதவெறியை புகுத்துவது மிகப்பெரிய சமூக சீர்கேடாகத்தான் முடியும். இஸ்லாமியார்களோ, இந்துக்களோ எந்த மதத்தினராக இருந்தாலும், மாணவர்களிடம் மதத்தை புகுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதை உடனடியாக கைவிடுவதே சகோதரத்துவத்துக்கு நல்லது. RSS, PFI என எந்த அமைப்பாக இருந்தாலும், கல்விக்கூடங்களில் மாணவர்கள் மனதில் மதம் எனும் நஞ்சை விதைப்பது ஆரோக்கியக் கேடானது. இலங்கை, சீனா, ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், பெல்ஜியம், பல்கேரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் ஹிஜாப் அணிய தடை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry