திமுக ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்ட முதலமைச்சர்! உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார் என கருத்து!

0
12

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்துக்காக தங்கள் மீது புகார் கூறுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு நிதி உதவி வழங்க ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட அரசு ரூ.2,500 வழங்கிட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மக்களிடத்தில் கிடைத்துள்ள வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல், தி.மு.க தலைவர் ஸ்டாலின் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்என்றார். அத்துடன் திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை புள்ளிவிவரத்துடன் அவர் பட்டியலிட்டார்.

அத்துடன்ஸ்டாலின் தற்போது உதயநிதியை முதல்வராக்க நினைக்கிறார். தி.மு.க கூட்டணியில் உள்ளவர்களுக்கே சுதந்திரம் இல்லை. ஸ்டாலின் இருக்கும்போது அவரை எதிர்த்து கருத்துச் சொல்லவே பயப்படுகின்றனர். எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் சுயமாகச் சுதந்திரமாகப் பேசக் கூடியவர்கள்என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் இன்று கிண்டியில் உள்ள ராஹ்பவனில் சந்தித்து பேசினர். அப்போது, .தி.மு.. ஆட்சியில் முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி 97 பக்கம் அடங்கிய பட்டியலை ஆளுநரிடம் மு..ஸ்டாலின் வழங்கினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry