இந்தியாவுக்கும் வந்துவிட்டது யு.கே. வைரஸ்? பெரும் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை! 2021 எப்படி இருக்கும்?

0
16

COVID-19ஐ விட 70% அதிவேக பரவும் ஆற்றல் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ்(VUI–202012/01), உலக நாடுகளை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. இங்கிலாந்தில் உருவான இந்த புதிய வேற்றுருவ (Varient) வைரஸ், இந்தியாவுக்குள்ளும் பரவி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வீரியம் அதிகம், விழிப்புணர்வு தேவை

வுஹான் வைரஸின் மரபணுத்தொடரோடு ஒப்படும்போது, இந்த வேற்றுருவ வைரஸ் 17 இடங்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளது. (இனி இதை யு.கே. வைரஸ் என்றே அழைக்கலாம்) இந்த யு.கே.வைரஸ், இந்தியாவுக்குள் ஊடுருவினால் அதன் பாதிப்பு விகிதம், தற்போது இருப்பதைக் காட்டிலும் 10 மடங்கு உயரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

யு.கே. வரைஸ் இந்தியாவில் இதுவரை காணப்படவில்லை என்று நிதி அயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார். மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதால், மக்கள் பீதி அடையத் தேவையில்லை, விழிப்புடன் இருந்தாலே போதும் என்பது அவரது அறிவுரையாக இருக்கிறது.

இந்தியாவில் யு.கே. வைரஸ்?

மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்து வேறுபடுகிறது. செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உடைய புதிய வகை, ஏற்கனவே இந்தியாவை எட்டியிருக்கக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். வேற்றுருவ வைரஸைக் கண்டறிந்து, அது மேலும் பரவுவதைத் தடுக்க முழு மரபணு வரிசை முறை அடிப்படையிலான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று, Institute of Genomics and Integrative Biology மைய இயக்குநர் டாக்டர் அனுராக் அகர்வால் உள்ளிட்டோர்  வலியுறுத்தியுள்ளனர். மாஸ்க் அணிந்தால் மட்டுமே யு.கே வைரஸிடம் இருந்து தப்பிக்கலாம் என அவர் கூறுகிறார்.

சோதனை முறையை மாற்றுவது அவசியம்

அசோகா பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட்டும், திரிவேதி ஸ்கூல் ஆஃப் பயோசயின்சஸின் இயக்குநருமான டாக்டர் ஷாஹித் ஜமீல் கூறும்போது, “யு.கே. வைரஸ் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்திருக்கலாம், அதை உடனடியாக அடையாளம் காண வேண்டும். கோவிட் -19 பரவலில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. யு.கே. வைரஸ் போன்ற சில மாறுபாடுகள், இந்தியாவிலும் உருவாகியிருக்கக்கூடும். சோதனை முறையை மாற்ற வேண்டியது அவசியம்” என்கிறார்.

Source : New Covid strain may be in India already: Experts

என்ன செய்யப்போகிறது மருத்துவ உலகம்?

மருத்துவ உலகை கவலை கொள்ளச் செய்வது, யு.கே. வைரஸை குணப்படுத்தும் முறையைக் கண்டறிவதுதான். இதன்மூலம் மருத்துவ உலகம் சவால்களை எதிர்கொள்ள மீண்டும் தயாராக வேண்டியிருக்கிறது.

1. RNA வகை மரபணு தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள அல்லது தயாராகி வரும் ஃபைசர், ஆக்ஸ்ஃபோர்டு உள்ளிட்ட SARS-CoV-2 தடுப்பூசிகள், யு.கே. வைரஸை எதிர்த்துப் போராடுமா?

2. RT-PCR சோதனையில் யு.கே. வைரஸ் தொற்றை நூறு சதவிகிதம் கண்டறிய இயலாது என்று கூறப்படுகிறது. எனவே இந்த வேற்றுருவ யு.கே. வைரஸை கண்டறிய புதிய சோதனை முறையை உடனடியாக அடையாளம் கண்டாக வேண்டும்.

3. கபசுரக் குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் COVID-19-ஐ மட்டுப்படுத்த, நல்ல பலனை தந்தது. ஆனால், யு.கே. வைரஸ் வீரியமிக்கது என்பதால், கபசுரக் குடிநீர் அதை கட்டுப்படுத்துமா அல்லது மாற்று மருந்தை சித்த மருத்துவத்துறை கண்டறிய வேண்டுமா?

4. COVID-19 ஆல் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவரை, வீரியம் மிக்க யு.கே. வைரஸ் தொற்றுமா? அப்படித் தொற்றினால், அந்த நபரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா?

5. நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுபோல, இந்தியாவில் யு.கே. வைரஸ் தடம் பதித்திருந்தால் அல்லது வேற்றுரு எடுத்திருந்தால், அதை போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.

தென்னாப்பிரிக்காவிலும் வேற்றுருவ வைரஸ்

இதனிடையே, வுஹான் வைரஸ், யு.கே. வைரஸ் வரிசையில், புதிய வேற்றுருவ கொரோனா வைரஸால் தென்னாப்பிரிக்கா விழிபிதுங்கி நிற்கிறது. மிகுந்த வீரியம் கொண்ட இந்த வைரஸ் இளைஞர்களிடையே வேகமாகத் தொற்றி பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்நாட்டு மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வுஹான் வைரஸ் பிடியிலிருந்து விலகி, இந்தியாவில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் சூழலில்,  யு.கே. மற்றும் தென்னாப்பிரிக்க வைரஸ் கவலை கொள்ளச் செய்கிறது. 2-வது அலை, மீண்டும் ஊரடங்கு என்ற நிலை ஏற்படாதவாறு, மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டாக வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry