செல்ல வேண்டிய தூரம் அதிகம்! செல்லும் வேகமும் அதிகமும்! ஆட்சி குறித்து முதலமைச்சர் கருத்து!

0
195

செய்தித்துறையின் தமிழரசு இதழ் சார்பாக “அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு” என்ற தலைப்பில் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பெற்றுக்கொண்டார்.

இந்த இதழுக்கு வாழ்த்துச் செய்தி எழுதியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சியின் ஓராண்டு காலம் என்பது தனக்கு மனநிறைவை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது எனவும், அதே நேரத்தில் சென்று கொண்டிருக்கும் வேகமும் அதிகம் எனவும் குறிப்பிட்டார்.

இதுபோலவே குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கோயில் வளர்ச்சிக்கான பணிகளை விரைந்து முடித்து சாதனை படைத்து வருகிறார் ஸ்டாலின் என புகழாரம் சூட்டியுள்ளார். கவிஞர் வைரமுத்துவும் வாழ்த்துக் கட்டுரை எழுதியுள்ளார். அதில், நீண்ட காலங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து ஒரு இந்தியத் தலைவன் உருவாகிறான் என்ற முணுமுணுப்பு இந்தியாவின் எல்லா தேசிய மொழிகளிலும் கேட்கத் தொடங்கியுள்ளது என அவர் பாராட்டியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry