‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை ரசித்துப் பார்த்த முதலமைச்சர்! படக்குழுவினருக்கு பாராட்டு!

0
168

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வரும் 20-ந் தேதி வெளியாகவுள்ளநெஞ்சுக்கு நீதி’( Nenjukku Neethi) திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், படக்குழுவை பாராட்டினார்.

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளநெஞ்சுக்கு நீதிதிரைப்படத்தில் இவர் நாயகனாக நடித்துள்ளார். Zee Studios – போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து  நெஞ்சுக்கு நீதிபடத்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில்நெஞ்சுக்கு நீதிதிரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

படம் பார்க்க சென்ற முதலமைச்சர் மு..ஸ்டாலினை, படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பூங்கொத்து அளித்து வரவேற்றார். படத்தை பார்த்த பின்பு, இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனிகபூர், ராகுல் மற்றும் நாயகன் உதயநிதி ஸ்டாலின் என அனைவருக்கும் மு..ஸ்டாலின் வாழ்த்துகளை கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிடுகிறது. நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெயிலரும், டீசரும் ஏற்கனவே யூ டியூபில் வெளியாகியுள்ளது.

Also Read : நெஞ்சுக்கு நீதிடிரெய்லர் & இசை வெளியீட்டு விழா! சமூக அவலத்தை சாடும் அழுத்தமான திரைப்படம்!

நெஞ்சுக்கு நீதிபடத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். ஆரி அர்ஜூனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தினேஷ்கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரூபன் எடிட் செய்துள்ளார். திபுநினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry