அமைச்சர் பதவி ராஜினாமா! பாஜக-வில் இணைய ஆயத்தம்! காங்கிரஸை கதறவிடும் நமச்சிவாயம்!

0
110

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நமச்சிவாயம்,  அமைச்சர் பதவியில் இருந்து விலகியதோடு, வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

புதுச்சேரிஅமைச்சரவையில்பொதுப்பணித்துறைஅமைச்சராகஇருந்தநமச்சிவாயம், கட்சி மீதும், முதலமைச்சர் நாராயணசாமி மீதும் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தார். அவர் தமாகாவில் சேரலாம் என்று வெளியான தகவலை கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி வெளியிட்டிருந்தோம். அதனை நமச்சிவாயம் மறுத்திருந்தார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்று கட்சிக்கு அழுத்தம் கொடுத்துப் பார்த்தார் நமச்சிவாயம். ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத காங்கிரஸ் கட்சி அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவந்தது. ஆனால், கட்சித் தலைமை மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. டெல்லி சென்று பாஜக தலைமையுடன் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். தம்மை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற நமச்சிவாயத்தின் நிபந்தனையை பாஜக ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதியே பதிவு செய்திருந்தோம்.

Also Read : முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறார் நமசிவாயம்! திரைமறைவு பேச்சுவார்த்தைகள் மும்முரம்! எந்தக் கட்சி என்பதை ஜனவரியில் அறிவிக்க முடிவு!

இதன்பின்னர் நமச்சிவாயம் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதேநேரம், நாராயணசாமி மீது அதிருப்தியில் இருக்கும் ஜான்குமார் எம்.எல்..வும் பாஜக மேலிடப்பொறுப்பாளரை சந்தித்தார். அரசியல் களத்தை தீர்மானிக்கும் சக்தியாக நமச்சிவாயம் மாறிவருவது பற்றி கடந்த 15-ந் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

Also Read : புதுச்சேரியில் மையம் கொண்டிருக்கும் நமசிவாயம் புயல்! எந்தப் பக்கம் கரையை கடக்கும் என காத்திருக்கும் அரசியல் புள்ளிகள்!

இதையடுத்து மாநிலம் தழுவிய தனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் என நமச்சிவாயம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற சம்மதித்த நிலையில், அமைச்சர், எம்.எல்.. பொறுப்புகளை இன்று மாலை ராஜினாமா செய்ய நமச்சிவாயம் திட்டமிட்டிருந்தார். இதையறிந்த நாராயணசாமி, நமச்சிவாயத்துக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியாக, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏவி சுப்பிரமணியன் மூலம், கட்சி விரோத நடவடிக்கைக்காக நமச்சிவாயத்தை இடைநீக்கம் செய்வதாக அறிவிக்க வைத்தார்

இந்நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான  கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமிக்கு நமச்சிவாயம் அனுப்பிவைத்தார். பின்னர் சபாநாயகர் சிவக்கொழுந்துவைச் சந்தித்த நமச்சிவாயம் மற்றும் ஊசுடு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் இருவரும், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்தனர். அப்போது மாநில பாஜக தலைவர் சாமிநாதனும் உடனிருந்தார். இதன் மூலம், வேல்ஸ் மீடியா ஏற்கனவே பதிவிட்டபடி நமச்சிவாயம் பாஜகவில் இணைவது உறுதியாகிவிட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.க்கள் பலம் 12 குறைந்துள்ளது. ஆனாலும் காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை.

நமச்சிவாயத்தின் ஆதரவாளர்களான, மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர்கள் சாம்ராஜ், .வி. வீரராகவன், கே.ஏகாம்பரம், மாநில செயலாளர் எஸ்.கே. சம்பத், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர். ரமேஷ், மண்ணடிப்பேட்டை, ஊசுடு, திருபுவனை வட்டார காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் சிறப்பு அழைப்பாளர் என பலர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இவர்களைப்போன்று மேலும் பல நிர்வாகிகளும், எம்.எல்..க்களும்  காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry