காவல்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்! பிணையே கிடைக்காது! தனிமனித உரிமைகளை மீறும் சட்டத்திருத்தம்!

0
121

தனி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் ‘குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்’ கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டிருக்கிறது.

எதிக்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்திருக்கும் `குற்றவியல் நடைமுறை மசோதா-2022′ (Criminal Procedure (Identification) Bill – 2022) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.

Also Read : தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திருத்தச் சட்டம்! திராவக மாடல் கொத்தடிமை அரசு என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

இதன்படி, எந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்படுபவர்களின் கை ரேகை, கால் ரேகை மட்டுமல்லாது அவர்களின் உயிரியல் மாதிரிகளும் சேகரிக்கப்படும். அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் டி.என்.ஏ. சோதனைக்காக ரத்தம், விந்து, தலைமுடி, சளி, எச்சில் என அனைத்துவிதமான மாதிரிகளும் சேகரிப்பதில் அடங்கும். மேலும், கருவிழி, விழித்திரை ஸ்கேன், புகைப்படங்கள், கையெழுத்து மற்றும் பழக்க வழக்கங்கள் கூட பதிவு செய்யப்படும். இதற்கான முழு அதிகாரம் மற்றும் அனுமதியை காவல்துறை, புலனாய்வு, சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

இது, அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், தனி மனித உரிமைகளைப் பறிக்கக்கூடியது என்றும் எதிர்க்கட்சியினர், சட்ட வல்லுநர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாதிரிகளை சேகரிப்பதற்கே இவ்வளவு எதிர்ப்பு எழுந்த நிலையில், காவல்துறைக்கு மிக அதிகளவு அதிகாரம் அளிக்கும் வகையில், தனி மனித உரிமைகளைப் பறிக்கக்கூடிய, வழக்குகளில் சிக்கினால் பிணையே கிடைக்காத அளவுக்கு வகை செய்யும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவை, நடந்து முடிந்த பேரவைத்தொடரில் அறிமுகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டிருந்தது. இதனை மாநில சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 167, 372, 439 ஆம் பிரிவுகள் திருத்தப்படுகின்றன.

Also Read : ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவது நல்லது! தாகம் எடுக்கும்வரை காத்திருக்க வேண்டாம்! உணவியல் நிபுணர்கள் அறிவுரை!

439ம் பிரிவில், மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது பத்தாண்டுகளுக்கு அதிகமான தண்டனை பெறும் வழக்கில் பிணை பெறும் ஒருவர், மீண்டும் அத்தகைய குற்றத்திற்காக கைதானால், பிணை கிடைக்காது என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்சியாளர்களோ, போலீஸோ, ஒரே குற்றத்தை அடுத்தடுத்து செய்ததாக யாரை வேண்டுமானும் 2-வது முறையாக குற்றவாளியாக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.

372ம் பிரிவில், அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்த 30 நாட்களுக்குள்ளாகவும், உயர் நீதிமன்றம் தண்டனை விதித்த அறுபது நாட்களுக்கு உள்ளாகவும் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். தண்டனை பெற்ற ஒருவர் மேல் முறையீடு இந்த கால அவகசமானது போதுமானதாக இருக்காது.

167ம் பிரிவானது, 24 மணி நேரத்தில் விசாரணை முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறது. இதன்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரை காணொளிக் காட்சி வழியாக நேர்நிறுத்தினாலும், நீதித்துறை நடுவர் நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்யலாம். குற்றம்சாட்டப்பட்ட நபரை, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 60 நாட்கள் 90 நாட்கள் என காவலில் வைக்கலாம். மட்டுமல்லாமல், குற்றவியல் அரசு வழக்கறிஞரின் அறிக்கைப்படி, 120 நாட்கள், 180 நாட்கள் வரையிலும்கூட காவலில் வைக்க நடுவர் அதிகாரமளிக்கலாம்.

Also Read : என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

இவ்வாறு, காவல்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கைதானவருக்கு பிணையே கிடைக்காது என்ற அளவுக்கு காவல்துறைக்கு அதிகாரம் கொடுத்து தமிழ்நாடு அரசு சட்டத்தை திருத்துவதற்காக பேரவையில் மசோதாவாக தாக்கல் செய்ய இருந்தது. பேரவை நிகழ்ச்சி நிரல் பட்டியலிலும் இடம்பெற்றது. ஆனால், மசோதா தாக்கலாவதற்கு முன்பாகவே ஆளும் கட்சிக்குள்ளாகவே எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக, சத்தமில்லாமல் அது திரும்பப்பெறப்பட்டுள்ளது. தற்காலிகமாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருந்தாலும், அடுத்து வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.

இதனிடையே, தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

Recommended Video

பிஜேபியை குஷிப்படுத்தவே தொழிலாளர் விரோத சட்டத்திருத்தம்! | Savithri Kannan Interview

வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்தாலும், ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் அழுத்தத்தின் பேரிலேயே இந்தச் சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா வந்திருந்த டிம் குக் தாம் ஊர் திரும்புவதற்கு முன்னதாக சட்டத்தை நிறைவேற்றி ஆக வேண்டும் என சொன்னதின் பேரிலேயே, கூட்டணி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் எதிர்ப்பை மீறி திமுக அரசு மசோதாவை நிறைவேற்றி உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry