இன்டோர் ஸ்டேடியத்தை மட்டும் திறக்க அனுமதித்தது யார்? நிர்வாக அதிகாரியின் முறைகேடுக்கு துணைபோகிறதா புதுச்சேரி அரசு?

0
20

புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இருக்கும் உள் விளையாட்டு அரங்கில் மட்டும் விளையாட அனுமதிக்கப்படும் நிலையில், கொரோனா பரவலை காரணம் காட்டி, வெளி விளையாட்டு அரங்கில் வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உள் விளையாட்டு அரங்கம் எனப்படும் இன்டோர் ஸ்டேடியம் மூலம் கொரோனா பரவாதா என்பதே வீரர்களின் கேள்வியாக உள்ளது.

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கமானது, இன்டோர், அவுட்டோர் என இரு பிரிவுகளாக செயல்படுகிறது. ஷட்டில்காக், டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் உள்ளிட்டவை இன்டோரிலும், எஞ்சிய விளையாட்டுகளை அவுட்டோரிலும் விளையாடலாம் அல்லது பயிற்சி செய்யலாம்.

இங்கு, இன்டோர் விளையாட்டுகளை பெரும்பாலும் பணம் படைத்தவர்களே பயிற்சி செய்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக, இன்டோர் மற்றும் அவுட்டோர் ஸ்டேடியங்கள் மூடப்பட்ட நிலையில், அரசின் தளர்வுகளுக்குப் பிறகு, இன்டோர் ஸ்டேடியம் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதுதான் பிரச்சனையின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. இந்திரா விளையாட்டு அரங்கத்தின் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சண்முகம். அவரிடம், அவுட்டோர் ஸ்டேடியத்தையும் பயிற்சிக்கு திறக்குமாறு வளர்ந்து வரும் ஏழை விளையாட்டு வீரர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, கொரோனா பரவும் என்பதாலேயே, அவுட்டோர் ஸ்டேடியத்தை திறக்கவில்லை என அவர் கூறியதாகத் தெரிகிறது.

இன்டோர் ஸ்டேடியத்தில் பயிற்சி எடுத்தால் தொற்றாத கொரோனா, அவுட்டோர் ஸ்டேடியத்தில் பயிற்சி எடுக்கும்போது மட்டும் தொற்றிக்கொள்ளுமா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. வசதி படைத்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, இன்டோர் ஸ்டேடியத்தை பயன்படுத்த, நிர்வாக அதிகாரி சண்முகம் அனுமதிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், அரசு அதிகாரியான சண்முகம், பெண்களுக்கான பெரிய தனியார் பள்ளி ஒன்றில், பகுதி நேர உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.  அரசு ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் என்ற நிலையில், சண்முகமோ, இதே ஸ்டேடியத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக எப்படி நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார் என்ற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர்

கொரோனா வைரஸ் மூடப்பட்ட அறைகளில் விரைவாக பரவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மூடப்பட்ட அறைகள் அல்லது அரங்குகளில் ஒரு நபர் பேசும்போது வெளியாகும் சிறிய நீர்துளிகளும் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

ஆதாரங்கள் :

1. https://www.sciencedaily.com/releases/2020/08/200820102503.htm

2. https://youtu.be/ysFND7kQBAg

3. https://sites.kowsarpub.com/asjsm/articles/103178.html

4.https://www.researchgate.net/publication/340447690_Stadiums_as_Possible_Hot_Spots_for_COVID-19_Spread

இன்டோர் ஸ்டேடியத்தை மட்டும் திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளதா? அரசு ஊழியரான சண்முகம், தனியார் பள்ளியில் பண்யாற்ற சிறப்பு அனுமதி பெற்றுள்ளாரா? ஆறு ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுவது எப்படி? கடற்கரையில் நடைபயிற்சிக்காக இரவு 9 மணி வரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அவுட்டோர் ஸ்டேடியம் மட்டும் மூட்டப்பட்டிருப்பதன் பின்னணி என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு அத்துறைக்கான அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும், மாவட்ட ஆட்சியர் அருணும் தான் பதிலளிக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry