கட்சி மாறப்போவதாக வெளியான தகவல் தவறு! அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி பரப்பப்படுவதாக அமைச்சர் நமசிவாயம் விளக்கம்!

0
13

காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணையப்போகவதாக வெளியான செய்தி தவறு என்று அமைச்சர் நமசிவாயம் கூறியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நமசிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் அவர் தமிழ் மாநில காங்கிரஸில் இணைய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது என்றும், உயர்மட்ட தகவலின் அடிப்படையில் வேல்ஸ் மீடியா செய்தி வெளியிட்டிருந்தது.

Also Read: த.மா.கா.வில் இணைகிறார் நமசிவாயம்! தேர்தலில் என்.ஆர்-உடன் கூட்டணி! வன்னியர்களை புறக்கணிப்பதால் ஆவேசம்!

இந்தச் செய்தியை திட்டவட்டமாக மறுத்து, அமைச்சர் நமசிவாயம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தனது அரசியல் சம்பந்தமான அவதூறு செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக அதில் அவர் கூறியிருக்கிறார். காங்கிரஸ் பேரியக்கத்தின் கண்ணியமிக்க தொண்டனாக செயல்பட்டு வருவதாகவும், அரசியல் உள்நோகத்துடன் அவதூறு செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் நமசிவாயம் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் வேல்ஸ் மீடியா இந்தச் செய்தியை வெளியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.  உள்ளார்ந்த, உயர்மட்டத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. செய்தியை வெளியிட்ட பிறகு, அவரது கருத்தறிய நாம் தொடர்பு கொண்டபோது, அவர் தொலைபேசி இணைப்பை ஏற்கவில்லை. யாரைப்பற்றியும் அவதூறாகவோ, உள்நோக்கத்துடனோ செய்தி வெளியிடுவது கிடையாது என்பதை வேல்ஸ் மீடியா உறுதியுடன் கடைப்பிடிக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry