புதுச்சேரிக்கு புதிய போலீஸ் அதிகாரி நியமனம்! சந்தேகம் எழுப்பும் ஐ.ஜி. டிரான்ஸ்ஃபர்! பெரும் குழப்பத்தில் காவல்துறையினர்!

0
62

புதுச்சேரியில் காவல்துறை ஐ.ஜி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். .டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அந்த அதிகாரி, என்னவாக பதவியேற்பார் என்பதே காவல்துறையினரின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது

புதுச்சேரி உள்ளிட்ட எந்த யூனியன் பிரதேசங்களிலும், காவல்துறையில் ஏ.டி.ஜி.பி. என்ற பதவியே கிடையாது. டிஜிபிக்கு அடுத்தபடியாக, ஐஜி பதவிதான் இருக்கும். இந்நிலையில், புதுச்சேரி காவலர்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

தற்போது, டெல்லியில் இருந்து ஆனந்த் மோகன் என்பவர் புதுச்சேரிக்கு (Joint AGMUT Cadre) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், புதுச்சேரியில் பணியிலிருந்த ஐஜி ஒருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். எனவே புதிதாக வரும் அதிகாரி, என்ன ரேங்க்கில் வருகிறார் என காவல்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால், ஏடிஜிபியாக இருந்த சுந்தரி நந்தா என்பவர், புதுச்சேரிக்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அப்படிப்பார்த்தால், தற்போது புதிதாக வரும் ஏடிஜிபி ஆனந்த் மோகன், டிஜிபியாக பதவியேற்பாரா அல்வது, .ஜி.யாக பொறுப்பேற்பாரா என்ற சந்தேகம் எழுகிறது. ஏடிஜிபியாக இருக்கும் ஒருவர், அதற்கு கீழ்நிலையான ஐஜி பொறுப்பை ஏற்க சாத்தியமில்லை என காவல்துறையினர் கூறினாலும், அவர்களுக்கும் தெளிவு கிடைக்கவில்லை.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் வேல்ஸ் மீடியா தரப்பில் கேட்டபோது, ஜம்மு காஷ்மீரில் அப்துல் கனி மிர் என்பவர் கடந்த ஜூலை மாதம் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆனந்த் மோகனும் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்காலம் என்று கூறுகின்றனர். இவர்கள் சொல்வதைப்போலவே, அவர் ஏடிஜிபி-யாகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனந்த் மோகன் ஏற்கனவே, புதுச்சேரியில் எஸ்.எஸ்.பியாக பணியாற்றியவர். எனவே, புதுச்சேரி விவகாரங்கள் அவர் அத்துப்படியானவை. அதேபோன்று, தலையீடுகளைத் தாண்டி உறுதியான முடிவுகளை எடுப்பவர் என்று  பெயர் பெற்றவரான ஆனந்த் மோகன், ஏடிஜிபி-யாக பொறுப்பேற்ற பிறகு, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சில என்கவுன்ட்டர்கள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே காவல் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீரடையும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry