40 ஆண்டுகால அரசியல் வாழ்வில் என்ன சாதித்தார் புதுச்சேரி எஸ்.பி. சிவக்குமார்! வேல்ஸ் மீடியா பிரத்யேக அலசல்!

0
5

புதுச்சேரி திமுகவின் முகமாக அறியப்படுபவர் எஸ்.பி. சிவக்குமார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீதான ஈர்ப்பால், மாணவர் பருவம் முதலே, அவரது அடியொட்டி நடக்கத்தொடங்கி, அரசியலில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் பி.. பொருளாதாரம் பயின்ற அவர், தனது மூன்றாம் ஆண்டில், மாணவர் பேரவையை தொடங்குகிறார். மாணவர் பருவம் முதலே கருணாநிதியின் எழுத்துக்களை ஆழ்ந்து வாசிக்கும் பழக்கம் கொண்ட எஸ்.பி. சிவக்குமார், பேரவை தொடக்க விழாவுக்கு கருணாநிதியை அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

தனது விருப்பத்தை கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க, அவரோ, சாத்தியமே இல்லை என்பதாகக் கூறுகிறார். ஆனால், சிவக்குமார் திடமான நம்பிக்கையுடன், அப்போதைய அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் மூலம் சென்னை சென்று கருணாநிதியை சந்தித்து பேரவை தொடக்க விழாவுக்கு அழைக்கிறார்.

கருணாநிதியை சந்தித்த சூழல், தனது அழைப்பை ஏற்பாரா என்ற சந்தேகத்தை அவருக்கு ஏற்படுத்தினாலும், அவர் தன்னம்பிக்கையை விடவில்லை. அவரது அழைப்பு ஏற்கப்பட்ட மாணவர் பேரவை தொடக்க விழாவுக்கு கோபாலபுரம்தான் நாள்குறிக்கிறது, பேரவை தொடக்க விழாவுக்கு மட்டுமல்ல, எஸ்.பி. சிவக்குமாரின் அரசியல் பயணத்துக்கும்தான். அந்த நாள் அக்டோபர் 5, 1980.

மாணவர் பேரவை தொடக்க விழாவையே பொதுக்கூட்டம் போல நடத்திக்காட்டினார் எஸ்.பி. சிவக்குமார். கருணாநிதி என்ற மிகப்பெரிய ஆளுமையுடன், அப்போதைய புதுச்சேரி முதலமைச்சர் ராமச்சந்திரன், அமைச்சர்கள் என அமர்க்களமாக விழாவை நடத்தி முடித்தார். இதை இப்படி சொல்வதைவிட, எஸ்.பி. சிவக்குமாரின் அரசியல் பயணத்தை துவக்கி வைக்கவே கருணாநிதி வந்தார் என்பதாகவே கருத வேண்டும்.

40 ஆண்டுகால அரசியல் பயணத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராஜ்பவன் தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்..வாக இருந்திருக்கிறார். ஒருமுறை கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வகித்திருக்கிறார். கட்சியினரை அரவணைத்துச் செல்வது மட்டுமல்ல, மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதிலும் கூட கருணாநிதியின் வார்ப்பாகவே இருக்கிறார் எஸ்.பி. சிவக்குமார்.

கோஷ்டி இல்லாத கட்சியே இருக்க முடியாது என்ற நிலையில், அரசியலில் தன்னை விரும்பாதவர்களையும், எதிரியாக பாவிக்காத இவரது பண்பை திமுகவினர் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் போற்றுகின்றனர். அதேநேரம், மக்கள் பிரச்சனைகளை, இவர் சொல்லும் விதம், ஆட்சியாளர்களின் பொட்டில் அடித்தாற்போல இருக்கும். பஞ்சாலைகளின் மரணம், திட்டமிட்டஸ்லோ பாய்சன்‘, புதுச்சேரியில் வேலைவாய்ப்புகள் வியாபாரமாகிவிட்டன போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

எஸ்.பி. சிவக்குமார் அரசியலில் 40 ஆண்டுகளை கடந்திருக்கலாம், ஆனால், அவர் சாதிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமிருக்கிறது. மக்களும் அவருக்கு கட்டளையிட காத்திருக்கிறார்கள். 40 ஆண்டுகள் எம்மாத்திரம், வாருங்கள், காத்திருக்கிறோம் என்கிறார்கள் புதுச்சேரி மக்கள். எஸ்.பி. சிவக்குமாரின் அரசியல் பொன்விழாவை கொண்டாட திமுக-வினர் மட்டுமல்ல, புதுச்சேரி மக்களும் காத்திருகிறார்கள். அரசியலிலும், இல்லற வாழ்விலும் அவர் மேலும் பல சிகரங்களை தொட, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் வேல்ஸ் மீடியாவும் மனதார வாழ்த்துகிறது. அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அரசுப் பதவியை அலங்கரிக்கவும் வேல்ஸ் மீடியா மனதார வாழ்த்துகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry