முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்வு! 100 ரூபாய் பத்திரம் இனி ரூ.1,000! 20 ரூபாய் பத்திரம் இனி ரூ.200!

0
261

முத்திரைத்தாள் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்துவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டமுன்வடிவில், 1889 ஆம் ஆண்டு இந்திய முத்திரை சட்டத்தின் கீழ் ஆவணங்களுக்கான கட்டணம் விதிக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டிலிருந்து பெரும்பாலான ஆவணங்களுக்கான முத்திரைக் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. நீதித்துறை அல்லாத முத்திரைத்தாள்களை அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, முத்திரத்தாள் கட்டணத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது.

Also Read : மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்! தவிர்க்க வேண்டிய உணவுகள்! Vels Exclusive

சட்ட திருத்த முன்வடிவில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது. இதேபோல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம், ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 500 உயர்த்தப்படவுள்ளது. நிறுவனங்களுக்கான ஆவண முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டுச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டமுன்வடிவுக்கு ஆரம்பநிலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி எதிர்ப்பை பதிவு செய்தார்.

2001 ஆம் ஆண்டுக்கு பிறகு முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த சட்ட மசோதா வரும் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றைய தினம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமசோதா பேரவையில் நிறைவேறியுவுடன் கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry