பந்துவீச்சாளர் பத்திரானாவால் ஐ.பி.எல். ஃபைனலில் விளையாட தோனிக்குத் தடை? அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

0
267
CSK skipper intentionally waste time in Qualifier 1 with umpires?

ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் கடந்த 23ந் தேதி முதல் துவங்கிய
 நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்திருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிஃபயர் போட்டியில் விளையாடின.

டாஸ் வென்ற குஜராத் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங்கில் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் சார்பில் முகமது சமி மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 173 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

Also Read : சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தமிழின விரோதப்போக்கு! தமிழ்நாட்டில் திறமையான இளம் வீரர்களே இல்லையா? என்ன செய்கிறது #TNCA?

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10
ஆவது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியின் போது காயம் காரணமாக பத்திரனா 8 நிமிடங்களுக்கு மேல் களத்தில் இல்லை. ஓய்வுக்குப்பிறகு களத்துக்குத் திரும்பியதும், அதாவது 4-வது நிமிடத்தில் தோனி அவரை பந்துவீசச் சொன்னார்.

குஜராத் இன்னிங்ஸின் 16வது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது. தோனி சொன்னபடி பத்திரனா பந்து வீச வந்தபோது சர்ச்சை ஆரம்பமானது. போட்டி விதியின்படி, மைதானத்திலிருந்து போட்டியாளர் வெளியேறினால் 9 நிமிடங்களுக்குப் பின்னரே பந்து வீச அனுமதிக்கப்படுவர்.

ஆனால் பத்திரனா மீண்டும் மைதனாத்திற்கு திரும்பிய 4வது நிமிடத்தில் தோனி அவரை பந்து வீசச் சொன்னார். அப்போது, பத்திரனா பந்துவீசுவதற்கு முன்பு சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் என்று போட்டி அதிகாரிகள் மற்றும் நடுவர் மூலம் தோனிக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பத்திரனா பந்து வீசுவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று தோனி வாதிட்டார்.

Also Read : கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்க்கு உலகம் தயாராக வேண்டும்! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ஏனெனில் தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா மற்றும் மகிஷ் திக்ஷா ஆகியோர் தங்களுக்கான 4 ஓவர்களை வீசி முடித்திருந்தனர். இந்த வாக்குவாதத்தால்  4-5 நிமிடங்கள் கடந்தன. 4 – 5 நிமிடங்களை ஈடுசெய்யவே நடுவர்களிடம் தோனி பேச்சுக்கொடுத்து, விதிமுறை குறித்து கேட்டறிந்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பத்திரனா பந்துவீச அனுமதிக்கப்பட்டது. இது ஆட்டத்தின் திருப்பமுனையாகவும் அமைந்தது.

ஐபிஎல் போட்டியின் விதிகளின்படி, உள் காயத்திற்கு சிகிச்சைக்காக மைதானத்தை விட்டு வெளியேறும் வீரர் – அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் சென்று திரும்பும்போது, பந்து வீச அனுமதிக்கப்படுவதற்கு முன்பு குறிப்பிட்ட நிமிடங்கள் விளையாடிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார். குஜராத் இன்னிங்ஸின் 12வது ஓவரை வீசிய பிறகு, பத்திரனா சிகிச்சைக்காக மைதானத்திற்கு வெளியே சென்றார். அவர் திரும்பி வந்ததும், தோனி அவரை 16வது ஓவர் வீசச் சொன்னதே பிரச்னைக்குக் காரணம்.

இதுபோன்ற சர்ச்சைகள் எழும்போது, விதி 41.9-ன் கீழ் நடுவர்கள் குறிப்பிட்ட அணிக்கு அபராதம் விதிக்கலாம். இதே விதியின்படி, நடுவர் பீல்டிங் அணிக்கு முதல் மற்றும் இறுதி எச்சரிக்கையை வழங்கலாம்.  மேலும், பந்துவீச்சின்போது வேண்டுமென்றே நேரத்தை வீணடிப்பதாக நடுவர்கள் உணர்ந்தால், பீல்டிங் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கலாம். பந்து வீச்சாளர் இடைநீக்கம் கூட செய்யப்படலாம். இருப்பினும், விதி மீறப்பட்டதா? இல்லையா? என்பதை நடுவர்களே தீர்மானிக்க முடியும். இந்த விதியின்படி நடுவர்கள் நடவடிக்கை எடுத்தால், சிஎஸ்கே கேப்டன் தோனி இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல்கூட போகலாம்.

Also Read : செயற்கை இனிப்பூட்டிகள் ஆபத்தானவை என WHO அறிவிப்பு! போதிய ஆதாரங்கள் இல்லை என மறுக்கும் மருத்துவ நிபுணர்கள்!

மேலும், சிஎஸ்கே ஏற்கனவே 2 முறை ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டு, 2 முறையும் ஓவர்ரேட்டிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, குஜராத் அணிக்கு எதிராக, பத்திரனாவால் சிஎஸ்கேவுக்கு ஓவர்ரேட் அபராதம் விதிக்கப்படும் சூழலும் இருக்கிறது.

பத்திரனா விஷயத்தில், போட்டியை தாமதப்படுத்தியது தவறு என்பதால், நிச்சயம் ஓவர்ரேட் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஒரு சீசனில் மூன்றுமுறை ஓவர்ரேட் வார்னிங் விடப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டால், கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும். ஆகையால்தான், தோனி ஃபைனல் ஆட்டத்தில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

அதேபோல், நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அடுத்த ஆட்டத்தில் விளையாட பிசிசிஐ யின் விதியின்படி தோனிக்கு அனுமதி மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆட்டம் ஐபிஎல் ஃபைனல் என்பதால் சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry