இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் ஆபத்து! சாதி என்ற உலகளாவிய நோய்க்கு இந்தியாவே காரணம்! திமுக கருத்தால் I.N.D.I.கூட்டணியில் பரபரப்பு!

0
56
DMK leader A Raja calls 'Hinduism a menace not only to India but to world' | File Photo

இந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிவரும் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா, இந்து மதம் முழு உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறியுள்ளார்.

கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் ஆ. ராசா, “சாதி என்ற உலகளாவிய நோய்க்கு இந்தியாவே காரணம். இந்தியா மக்களை சாதி அடிப்படையில் பிரிக்கிறது. சாதியைப் பயன்படுத்தி மக்கள் பொருளாதார ரீதியாக பிரிக்கப்படுகிறார்கள். ஜாதி சமூக ஸ்திரமின்மையை உருவாக்க மட்டுமே பயன்படுகிறது, பொருளாதார ஏற்றத்தாழ்வும் ஏற்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்து மதத்தின் பெயரால் சாதியைப் பரப்புகிறார்கள். இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்து மதம் முழு உலகிற்கும் ஆபத்து.” இவ்வாறு ராசா பேசியுள்ளார். இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆ.ராசாவின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்துக்களையும், சனாதன தர்மத்தையும் குறிவைப்பதுதான் எதிர்க்கட்சிக் கூட்டணியின் செயல்திட்டம் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறியுள்ளார். மேலும், “I.N.D.I. கூட்டணியின் மும்பை கூட்டத்தில் இந்துக்களை துஷ்பிரயோகம் செய்வதே நிகழ்ச்சி நிரல் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுவரை சனாதன ஒழிப்பு வேறு இந்து மதம் வேறு என்று சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, தெளிவாக, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆ. ராசா கூறுகிறார். அவர்களின் செயல்திட்டம் இந்துக்களையும், சனாதனையும் குறிவைப்பதாகும்,” என்று பூனவல்லா தெரிவித்துள்ளார்.

Also Read : சனாதனத்தை எதிர்க்கவே I.N.D.I. கூட்டணி! சனாதன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய I.N.D.I. கூட்டணியில் பிரச்சாரக் கமிட்டி! உண்மையை ஒப்புக்கொண்ட திமுக!

2015ம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போது திமுக பொருளாளராக இருந்த மு.. ஸ்டாலின்,  திமுக இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டை மறுத்தார். கட்சித் தொண்டர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்றும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read : சனாதனத்தை HIV, தொழுநோயுடன் ஒப்பிட்டு மீண்டும் சர்ச்சைப் பேச்சு! உதயநிதியை காப்பாற்ற ஆ. ராசா-வை களமிறக்கிய திமுக!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry