Nipah Virus! கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்! 2 பேர் உயிரிழந்ததால் கண்காணிப்பு தீவிரம்!

0
29
Staff members install a sign reading “Nipah isolation ward, entry strictly prohibited” at a hospital in Kerala’s Kozhikode district on September 12, 2023. | Photo Credit: Reuters

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். எந்தவித காய்ச்சல் என்று பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்துள்ளது.

அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயரிழந்த நிலையில், அவரது இறப்பக்கு நிபா வைரஸ் பாதிப்பே காரணமாக இருக்கலாம் என்று கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்தத்தை பரிசோதித்ததில், நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

Also Read : இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் ஆபத்து! சாதி என்ற உலகளாவிய நோய்க்கு இந்தியாவே காரணம்! திமுக கருத்தால் I.N.D.I.கூட்டணியில் பரபரப்பு!

இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளார்.  “நிலைமையை ஆய்வு செய்யவும், நிபா வைரஸ் மேலாண்மையில் மாநில அரசுக்கு உதவவும் மத்தியக் குழு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் இயற்கைக்கு மாறான இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து, கோழிக்கோட்டில் நேற்று மாவட்ட அளவிலான சுகாதார எச்சரிக்கை வெளியிடப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மத்திய சுகாதார அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

முதல் மரணம் ஆகஸ்ட் 30ஆம் தேதியும், இரண்டாவது மரணம் நேற்றும் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி உயிரிழந்தவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரள அரசு கோழிக்கோட்டில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் சிகிச்சையில் இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சுகாதாரத் துறை தயாரிக்கும் செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

2018ஆம் ஆண்டில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் அதிகம் பரவியது. இந்த வைரஸ் பாதிப்பால் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் 2021ஆம் ஆண்டில், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு பதிவானது.

Also Read : #BharatVsIndia ஆங்கிலேயர்கள் பாரதத்தை ‘இந்தியா’ என்று ஏன் மாற்றினார்கள்? அறிய வேண்டிய வரலாற்றுப் பின்னணி! Explainer!

நிபா வைரஸ் என்றால் என்ன?

நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒருவகை வைரஸ். தொடக்கத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ், பின்னர் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதனுக்கும் பரவுகிறது. பெரும்பாலும் பழ வௌவால்களிடமிருந்து இந்த வைரஸ் பரவுவதாக ஆய்வார்கள் கூறுகின்றனர்.

இந்த வௌவால்கள் இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் அதிகம் இருக்கின்றன. எனவே இந்த நாடுகளில் நிபா வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வௌவால்களிலிருந்து பன்றிகளுக்கும், அதிலிருந்து மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது. முதன் முதலில் கடந்த 1998ம் ஆண்டுதான் இந்த ரைவஸ் பாதிப்பு சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது.

அறிகுறிகள் என்ன?

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளே தென்படும். இருப்பினும் தொற்று பாதிப்பு ஏற்பட்ட 5-14 நாட்களுக்கு பின்னர்தான் அறிகுறிகள் தென்பட தொடங்கும். அறிகுறிகள் காய்ச்சலை போன்று இருந்தாலும், மருத்துவர்கள் சில தனிப்பட்ட அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளனர். இந்த அறிகுறிகள் மூலம் நிபா பாதிப்பை ஓரளவு உறுதி செய்யலாம்.

அதாவது, கடுமையான சுவாச தொற்று, சுவாசப் பிரச்னைகள், காய்ச்சல், தசை வலி, தலைவலி, தொண்டை புண், குமட்டல், வாந்தி, மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், நிமோனியா பாதிப்பு, மூளை வீக்கம் அல்லது மூளையழற்சி, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்கு படிப்படியாக முன்னேற்றம் ஆகியவை நிபா பாதிப்பின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry