இனி இப்படி பேசக்கூடாது..! மு.க. ஸ்டாலின் முன்னிலையில், மேடையிலேயே உதயநிதியை எச்சரித்த டி.ஆர். பாலு!

0
100
DMK MP TR Baalu warned Udhayanidhi to be cautious 

திமுகவின் 75 ஆவது பவள விழா மற்றும் முப்பெரும் விழா வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, “திமுக இவ்வளவு செய்த பிறகும் மக்கள் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள். இந்தியாவில் உள்ள அத்தனை மாநில தலைவர்களும் நமது இளைஞரணி தலைவரை பார்த்து பயந்து கொண்டு இருக்கிறார்கள், அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்று. எல்லாம் பொறாமை தான் வேறொன்றும் கிடையாது. உதயநிதி அவரது அப்பாவை பார்த்தால் மட்டும்தான் பயப்படுகிறார், வேறு யாரைப் பார்த்தாலும் பயப்படுவது கிடையாது.

Also Read : அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை! அண்ணாமலை என்ற நரி ஊளையிடுகிறது! அதிமுகவினர் விடமாட்டார்கள்! ஜெயக்குமார் எச்சரிக்கை!

அவர் பாட்டுக்கு என்ன வேணாலும் பேசுகிறார். என்ன வேண்டுமானாலும் பேசலாம், பேசிவிட்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைப்பில் அவர் பேசுகிறார். ஆனால் தனது கையிலே வைத்துக் கொண்டிருக்கக் கூடிய பொருள் கீழே விழுந்து உடைந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மிகச் சிறப்பாக பணியாற்றுவது அவரது கடமை என்பதை நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையிலேயே, டி.ஆர். பாலு, உதயநிதி ஸ்டாலினை பாராட்டுவதுபோல எச்சரித்துப் பேசியது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்து வட மாநிலங்களில் I.N.D.I. கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பாக டெல்லி அரசியலில் கோலோச்சும் டிஆர் பாலுவிடம் வடமாநில தலைவர்கள் தங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டதை அடுத்தே, அவர் உதயநிதியை எச்சரிக்கும் வகையில் பேசினார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry