டீ குடிப்பதால் ஏற்படும் விபரீதங்கள்! எலும்பு அரிப்பை ஏற்படுத்தும் லெமன் டீ!

0
427

டீயில் பல நன்மைகள் இருந்தாலும், பல கெடுதல்களும் இருக்கின்றன. டீ ஏன் உடலுக்கு தீங்கானது, வெறும் வயிற்றில் டீ குடிக்கலாமா? என்னென்ன சாப்பிடும்போது டீ குடிக்கக்கூடாது போன்றவற்றை பார்க்கலாம்.

டீ குடிப்பதால் என்ன நன்மை?

சூடான டீ குடிப்பது போன்ற திருப்தி பலருக்கு எதிலுமே கிடைக்காது. பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில், தேநீர் சிகிச்சை முறையாக  பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவீன ஆராய்ச்சியிலும், தேயிலை தாவர கலவைகள், புற்றுநோய், உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற தொற்றா நோய்களின் ஆபத்தைக் குறைக்கிறது. இப்படி டீயின் பலன் அதிகம்தான்.

Source : https://pubmed.ncbi.nlm.nih.gov/24915350/

சுடச்சுட டீ குடிக்கலாமா?

நாம் குடிக்கும் டீயின் சூடு நமது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதிக சூடாக டீ குடிக்கும்போது, அது நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. 75 டிகிரி செல்சியஸ் சூட்டிலோ அதற்கு அதிகமாகவோ தினமும் டீ அருந்திவந்தால், உணவுக்குழாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய் ஏற்படக்கூடும். எப்படி என்றால், தொண்டையில் உள்ள திசுக்களை இந்தச் சூடானது சேதமாக்கிவிடும்.  சூடாக டீ குடிக்கும் பழக்கத்துடன், மதுவும், சிகரெட்டும் சேரும்போது தொண்டை புற்று வர வாய்ப்பு அதிகம்.

Source : Drinking Very Hot Tea Can Increase The Risk Of Throat Cancer

Source : https://www.medicalnewstoday.com/articles/320828

டீயுடன் சாப்பிடக்கூடாதவை எவை?

பச்சைக் காய்கறிகள், பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள், உலர் பழங்களில், உடலுக்கு நன்மை பயக்கும் ஏராளமான ஊட்டச் சத்துகள் உள்ளன. ஆனால், இதை டீ யோடு சாப்பிடும்போது, அது கெடுதலாக மாறுகிறது. குறிப்பாக, முட்டைகோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி, கடுகு, ப்ரோக்கோலி, சோயாபீன்ஸ் போன்றவற்றோடு டீயை அருந்தக்கூடாது.

பருப்புப் பொடியால் செய்யப்படும் பண்டங்களை சாப்பிடும்போதும் டீ அருந்தக்கூடாது. இது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துவதுடன், வயிற்றுப் பிரச்சனையையும் ஏற்படுத்தும். பலரும் முட்டையால் தயார் செய்யப்படும் உணவை (ஆம்லெட், போண்டா) சாப்பிட்டுவிட்டு  டீ யை அருந்துகிறார்கள். இந்த காம்பினேஷன் உடல் ஆரோக்கியத்தை படிப்படியாக குலைத்துவிடும். டீ இலைகளில் இருக்கும் டன்னிக் அமிலம், முட்டையில் உள்ள புரதத்தோடு சேரும்போது, குடல் தசை இயக்கத்தில் பிரச்சனை ஏற்படும்.

Source : Tea can bind to protein in the egg

அதிகளவு டீ குடித்தால் என்ன ஆகும்?

ஒரு நாளைக்கு 2-3 கப் டீ குடிப்பதால் பிரச்சனை இல்லை. பொதுவாக, தயாரிக்கப்படும் முறையையும், அதிலுள்ள கஃபைன் அளவையும் பொறுத்துதான் தீமைகள் அமைகிறது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கும்போது, அதிலுள்ள வேதிப்பொருளானது அசிடிட்டி மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.

அதிக அளவில் டீ குடிக்கும்போது, இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு டீயில் உள்ள Tannin எனும் அமிலம் காரணமாகும் (டீ பிரவுன் கலரில் இருக்க இதுதான் காரணம். தோல் தொழிற்சாலைகளில் தோலை பதப்படுத்தவும் இந்த அமிலம் பயன்படுத்தப்படுகிறது).  டீயில் இருக்கும் கஃபைன்,  பதற்றம், மன அழுத்தம், மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும். நாம் தயார் செய்யும் முறையைப் பொறுத்து, தோராயமாக, 250ml டீயில், 11-61 மில்லி கிராம் கஃபைன் இருக்கும். எனவே மூலிகை டீ சிறந்தது. அளவுக்கு அதிகமாக கஃபைன் எடுத்துக்கொள்ளும்போது, தூக்கமின்மை, நாள்பட்ட தலைவலி போன்ப பிரச்சனை ஏற்படும். டீயில் கலந்துள்ள Tannin அமிலம் சிலருக்கு குமட்டல், வயிற்று வலியை ஏற்படுத்தும்.

Source :  https://www.healthline.com/nutrition/side-effects-of-tea 

Source : https://recipes.timesofindia.com/articles/health/6-scary-side-effects-of-tea-that-you-didnt-know/photostory/60410030.cms

டீயில் உள்ள கஃபைன், இரைப்பையில் அமில உற்பத்தியை அதிகரிக்க காரணமாக இருப்பதால், அது நெஞ்செரிச்சலுக்கு காரணமாகலாம். கர்ப்ப காலத்தில் அதிகளவு டீ குடிப்பதால், அதிலுள்ள கஃபைனானது, கருச்சிதைவு அல்லது குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். டீயில் கஃபைன் அதிக அளவு இருந்தால் தலைச்சுற்றல் ஏற்படலாம். டீயானது உடலில் நீர்ச்சத்தை குறைப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். இதய நாள அமைப்புக்கு கஃபைன் நல்லதல்ல, இதய நோய் உள்ளவர்கள் அல்லது இதய நோய்களில் இருந்து மீண்டு வருபவர்கள் டீயை தவிர்க்க வேண்டும்.

லெமன் டீ குடிக்கலாமா?

டீயோடு லெமன் சேருவது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பல் அரித்துப்போதல், நெஞ்சு எரிச்சல், நீர்ச்சத்து குறைவது, ஈறுகளில் புண் போன்றவை ஏற்படலாம்.

கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள் லெமன் டீ தவிர்ப்பது நல்லது. எலும்பு அரிப்பு, மறதி, வயிற்றுப் பிரச்சனை போன்றவையும் லெமன் டீயால் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Source : Unexpected Side Effects Of Lemon Tea

ஒரு நபர் மூன்று அல்லது நான்கு முறை பேப்பர் அல்லது பிளாஸ்டிக் கப்புகளில் சூடான டீ அருந்தும்போது, 75,000 பிளாஸ்டிக் நுண் துகள்கள் உடலுக்குள் செல்வதாக காரக்பூர் ஐஐடி ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, கண்ணாடி, எவர்சில்வர், பீங்கான் டம்பளர்களில், மிதமான சூட்டில், ஒரு நாளைக்கு 2-3 டீ குடித்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry