தமிழ்நாட்டிலும் மக்கள் புரட்சி வெடிக்கும்! கோத்தபய நிலை ஸ்டாலினுக்கு ஏற்படலாம்! எச்சரிக்கும் ஈபிஎஸ்!

0
95

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொங்கு மண்டத்தில் சுற்றுபயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து பழனிக்கு நேற்று வந்த ஈபிஎஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் பெரும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து இன்று காலை பழனி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, பிறகு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது, “சட்டமன்ற தேர்தலில்  திமுக தப்பி தவறி ஆட்சிக்கு வந்துவிட்டது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் கூறினார். இதைக் கேட்டு ஏமாந்து மக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால் இதுவரையில் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பழிவாங்கும் நோக்கத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மீது ஸ்டாலின் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

கருணாநிதியால் கூட அதிமுகவை அழிக்க முடியவில்லை. எம்ஜிஆர் இறந்த பிறகு, ஜெயலலிதா அதிமுகவை பல மடங்கு உயர்த்தி இந்தியாவின் மிகப்பெரிய 3-வது கட்சியாக மாற்றிக்காட்டினார். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின்போது 24 மணி நேரமும், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது, மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என மக்களால் சொல்ல முடியவில்லை.

Also Read : நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதா? கொந்தளிக்கும் விவசாய சங்கங்கள்!

வீட்டு வரி மற்றும் சொத்து வரியை திமுக அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. திமுகவிற்கு ஸ்டாலின் தான்  தலைவர்,  ஆனால் அதிமுகவிற்கு தொண்டர்கள் அனைவரும் தலைவர்கள். காற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியாதோ, அது போல் தான் அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

Also Read : வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்! நாட்டுப்பற்று, தேச ஒற்றுமையை வளர்ப்போம் என ஈபிஎஸ் சூளுரை!

இலங்கையில் நடைபெற்ற குடும்ப ஆட்சியால், அதிபராக இருக்கும் போதே இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே  நிலைமை தமிழ்நாட்டில் திமுகவிற்கு வரும். தமிழ்நாட்டிலும் மக்கள் புரட்சி வெடிக்கும். எனவே திமுக அரசு தனது மக்கள் விரோத போக்கை மாற்ற வேண்டும்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry