மின் கட்டணம் மீண்டும் உயருகிறது? ஜுலை 1 முதல் 4.7% அதிகரிக்கப்படலாம் என தகவல்!

0
81
FILE IMAGE

நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணத்தை உயர்த்த தமிழக மின் வாரியம் தீர்மானித்தது. அதற்காக, 2022 ஜூலை 18ல், ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது. மக்களிடம் கருத்து கேட்ட பின், கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல், 35 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி, ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, வீடுகளுக்கு 400 யூனிட் வரை, 1 யூனிட்டிற்கு, 4.50 ரூபாய்; 401 – 500 வரை யூனிட்டிற்கு 6 ரூபாய்; 501 – 600 வரை யூனிட்டிற்கு 8 ரூபாய்; 601 – 800 வரை யூனிட்டிற்கு 9 ரூபாய்; 801 – 1,000 வரை யூனிட்டிற்கு 10 ரூபாய்; 1,001 மேல் யூனிட்டிற்கு, 11 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

Also Read : பிளஸ் 2 விடைத்தாளில் பெரும் குளறுபடி! கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியது அம்பலம்! பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி!

உயரழுத்த பிரிவில் பெரிய தொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட், 6.35 ரூபாயில் இருந்து, 6.75 ரூபாயாகவும்; கிலோ வாட்டிற்கு மாதம், 350 ரூபாயாக இருந்த தேவை கட்டணம், 550 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இதேபோல், அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டில் ஆணையம் பிறப்பித்த மின் கட்டண உயர்வு ஆணையில், 2026 – 27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 2023 ஏப்ரல் நிலவரப்படி உள்ள பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம், இரண்டில் எது குறைவோ, அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம், 4.70 சதவீதமாக உள்ளது. இது, 6 சதவீத அளவுடன் ஒப்பிடும்போது குறைவு. எனவே, அடுத்த மாதம் முதல், அனைத்து பிரிவு கட்டணமும் 4.70 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. அதாவது, தற்போதுள்ள யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதில் 4.70 சதவீதம் உயரும்.

Also Read : அமைச்சர் பொன்முடி Tongue Slip ஆகி Loose Talk விடுகிறார்! தமிழக ஆசிரியர் கூட்டணி கடும் விமர்சனம்!

மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, ஒன்பது மாதங்களே ஆன நிலையில், உயர்த்திய மின் கட்டணத்தையே செலுத்த முடியாமல், பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்த இருப்பது, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. ஆணைய தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களை, தமிழக அரசு தான் நியமனம் செய்கிறது. எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் அந்த ஆணையை நிறுத்தி வைக்குமாறு, ஆணையத்திடம் வலியுறுத்தினால், கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்படும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry