இந்த ஆண்டின் தலைசிறந்த நபர் எலோன் மஸ்க்! உலகின் முதல் பணக்காரருக்கு டைம் இதழ் புகழாரம்!

0
81

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் நிறுவனரான எலோன் மஸ்க், இந்த ஆண்டின் தலைசிறந்த நபர் என அமெரிக்காவை சேர்ந்த டைம் இதழ் அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவில் கடந்த 1971ம் ஆண்டு பிறந்த எலோன் மஸ்க்கின் தந்தை கனடாவை சேர்ந்தவர் என்பதால் பின்னாளில் அவர் அமெரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்தார். தமது 12வது வயதிலேயே கணினிகளின் மென்பொருளை உருவாக்கும் அளவுக்கு அத்துறையில் ஆர்வம் மிக்கவராக திகழ்ந்தார்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு பேபால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை தொடங்கிய அவர், தற்போது ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ், ஜிப்2, சோலார் சிட்டி, ஹைப்பர்லூப் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலராகவும், இணை நிறுவனராகவும் பொறுப்பில் இருக்கிறார்.

தற்போதைய நிலையில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் எலோன் மஸ்க் முதல் இடத்தில் உள்ளார். அதாவது, விண்வெளிப் பந்தய போட்டியாளரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி, இந்த ஆண்டு உலகின் மிகப் பெரிய பணக்காரராக ஆனார். இந்நிலையில், எலோன் மஸ்க் இந்த ஆண்டின் தலைசிறந்த மனிதர் என டைம் இதழ் அறிவித்துள்ளது. டைம் தனது ஆண்டின் சிறந்த நபர் விருதை முதன்முதலில் 1927 இல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*