டெஸ்லா உரிமையாளரும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான எலோன் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயர் வைத்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது சமூக வலைதளத்தில் இதனை உறுதி செய்துள்ளார்.
பிரிட்டன் நடத்திய உலகளாவிய AI (Artificial Inteligence – செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாட்டில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (MoS) ராஜீவ் சந்திரசேகர், Tesla, Space X, X.com CEOவான எலோன் மஸ்க்கை(Elon Musk) சந்தித்தார்.
இதையடுத்து, ‘எக்ஸ்’ தளத்தில் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள பதிவில், எலோன் மஸ்க்கின் மகன் ஷிவோனுக்கு “சந்திரசேகர்” என்ற மிடில் நேம் இருப்பதாகவும், 1983ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்ற இயற்பியல் பேராசிரியர் எஸ்.சந்திரசேகரின் நினைவாக மஸ்க் தனது மகனுக்கு இந்தப் பெயரை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
Haha, yes, that’s true. We call him Sekhar for short, but the name was chosen in honor of our children’s heritage and the amazing Subrahmanyan Chandrasekhar
— Shivon Zilis (@shivon) November 2, 2023
சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910 அக்டோபர் 19ம் தேதி லாகூர் பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது) பிறந்தவர். இவர் ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இயற்பியல் துறையில் உலகளவில் சிறந்து விளங்கிய சந்திரசேகருக்கு 1983ம் ஆண்டு, நட்சத்திரங்களின் கட்டமைப்பு மற்றும் பரிணாமம் குறித்த இவரது ஆய்வுக்காக இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. 1968ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருது அளித்து கௌரவித்திருந்தது. இதுதவிர, உலகளவில் இயற்பியல் சார்ந்த பல்வேறு விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
52 வயதான எலான் மஸ்க் இதுவரை 3 முறை திருமணம் செய்துள்ளார். 2 பேருடன் துணையாக இருந்துள்ளார். இவருக்கு மொத்தம் 11 குழந்தைகள். இதில், 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் Shivon Zilis (Director of neurotechnology company Neuralink) உடன் இவருக்கு இரட்டையர் பிறந்தனர். இரட்டை குழந்தைகள், இன் விட்ரோ கருத்தரித்தல் மூலம் பிறந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
Shivon Zilisன் தாய் பஞ்சாப்பை சேர்ந்தவர், தகப்பனார் கனடாவைச் சேர்ந்தவர். இந்த இரட்டையர்களில் ஒருவருக்குத்தான், சிவோன் சந்திரசேகர் ஜிலிஸ் (Shivon Chandrasekar Zilis)என்று எலோன் மஸ்க் பெயர் வைத்துள்ளார். நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானியான பேராசிரியர் சந்திரசேகர் தன்னை மிகவும் கவர்ந்தவர் என்பதால் அவரது பெயரை தனது மகனின் பெயரின் நடுவில் வைத்துள்ளதாக எலோன் மஸ்க், ராஜீவ் சந்திரசேகரிடம் தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry