Wednesday, March 18, 2026
Home Blog Page 120

ஆசிரியர்களுக்கு ஆதரவான மனுவை திரும்பப்பெறுவதா? பள்ளிக்கல்வித்துறை செயல்பாட்டை தேசியப் பிரச்சனையாக்க ஐபெட்டோ முடிவு!

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டிற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் தகுதித் தேர்வு அவசியம் என உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்ற அனுமதியால் ஆசிரியர்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு! சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த தேர்தல் நடத்தை விதிகள் அனுமதிக்கிறதா? அறிவிப்பின் உள்நோக்கம்தான் என்ன என ஐபெட்டோ கேள்வி?

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து, ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் -4 2024 வரை அமலில் இருப்பதால் அமைச்சர்கள் தங்களது அலுவலகம் வருவதைத் தவிர்த்து வருகிறார்கள். தலைமைச் செயலாளர் தொடங்கி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், பார்வையாளர்களை சந்திப்பதற்கு அனுமதியளிப்பதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் காலத்தில் தயிர்சாதம் சாப்பிடலாமா? கோடை காலத்தில் புளித்த உணவுகளை உண்பது சரியானதா?

தயிர் சூடு என நம்பப்படும் நிலையில், தயிர் சாதம் குறித்து சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்த உணவு குளிர்ச்சியானது, இது சூட்டைக் கிளப்பக்கூடியது என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல. அந்த வகையில் தயிர்சாதம் வெயிலுக்கேற்ற மிகச் சிறந்த உணவு என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற பரிசீலிக்க வேண்டும்! சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருதலைப்பட்சமாக எல்லையை அளக்கும் கேரளா! சலனமின்றி வேடிக்கைப்பார்க்கும் தமிழக அரசு! உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள விவசாயிகள்!

தமிழக கேரள எல்லையை முறைப்படி மத்திய சர்வே துறை மேற்பார்வையில் அளவீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் சொன்னால், இங்கே நிறைய பேர் அதை பிரிவினை வாதம் என்கிறார்கள்.

இந்தியர்களுக்கான ஆரோக்கியமான உணவு எது? சமைப்பதற்கு மண்பாண்டங்கள்தான் சிறந்ததா? மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு!

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், நோய்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைக் கருத்தில் கொண்டு, 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஐதராபாத்தில் இருந்து இயங்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் (National Institute of Nutrition (NIN)), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (Indian Council of Medical Research (ICMR) இணைந்து ‘இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை’ திருத்தி வெளியிட்டுள்ளது.

antalya bayan escort