Wednesday, March 18, 2026
Home Blog Page 186

தமிழ்ப் புத்தாண்டை குறிப்பிடாமல் அமைச்சர் வெளியிட்ட கல்வி நாட்காட்டியால் சர்ச்சை! திட்டமிட்டு புறக்கணிப்பு என தமிழ் ஆர்வலர்கள் புகார்!

2023 – 2024ம் கல்வி ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் 28.04.2023 அன்று வெளியிட்டார். 2023- 24ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு, காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வு உள்ளிட்ட தேதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

கார்ப்பரேட்டுகளுக்கு கைக்கூலி வேலை செய்வதா திராவிட மாடல்? காவியைப் பார்த்து காப்பி அடிக்கலாமா? நீதியரசர் ஹரிபரந்தாமன் ஆவேசம்!

சென்னையில் தியாகராய நகரில், ‘அறம் இணைய இதழ்’ சார்பில் 27.04.2023 அன்று “திசை மாறுகிறதா திமுக அரசு?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ‘அறம் இணைய இதழ்’ ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சாவித்திரி கண்ணன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில், ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன், ஐக்கிய விவசாய முன்னணி நிர்வாகி கே. பாலகிருஷ்ணன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மு. வெற்றிச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

2 ஆண்டுகளாக பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை! கல்வி மறுமலர்ச்சி தடைபடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், “தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் திட்டத்தின்படி, கடந்த இரு ஆண்டுகளாக ஓர் அரசுப் பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை. நடப்பாண்டிற்கான மானியக் கோரிக்கையிலும் இதுகுறித்து அறிவிக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டை பல வெப்ப அலைகள் தாக்கும் ஆபத்து! ஒவ்வொரு முறையும் ஒரு வாரம் வரை நீடிக்கலாம் என வானிலை மையம் எச்சரிக்கை!

இந்தியாவில் வெப்பம் மற்றும் குளிர் அலைகளை அளவிடுதலுக்கான ஆராய்ச்சி நெறிமுறை, அவற்றின் நீண்ட காலப் போக்கு, இயற்பியல் பொறிமுறைகள், முன்கணிப்பு, தகவமைத்தல், தணிப்பு போன்றவை குறித்த ஒரு ஆய்வுநூலை இந்திய வானிலை ஆய்வு மையம் 25.04.2023 அன்று வெளியிட்டுள்ளது.

ஊழல் பணம் அத்தனையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள்! முதல்வரின் மகனும், மருமகனும்தான் கட்சியே! #PTRLeaks – 2nd Audio!

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை டிவிட்டரில் வெளியிட்ட இரண்டாவது ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மணல் கடத்தலை தடுத்த விஏஓ வெட்டிப்படுகொலை! மாஃபியாக்களுக்கு ஆதரவாக இருக்கிறதா போலீஸ்?

தூத்துக்குடி அருகே மணல் கடத்தலுக்கு இடையூறாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணம் இதுதானா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. அரசு அலுவலருக்கே இத்தகைய நிலை என்றால், பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகளை கரம்கூப்பி வரவேற்கும் தமிழக அரசு! மத்திய அரசு சொல்லி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

21.04.2023 அன்று சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தைத்தான் திமுக அரசு அவசரகதியில் நிறைவேற்றியுள்ளது. ஜனநாயக விரோதமான இந்த நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டியது.

antalya bayan escort