ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
துறைமுகம் – மதுரவாயல் பறக்கும்சாலை திட்டம்! 2024 இறுதியில் நிறைவடையும் என மத்திய அரசு அறிவிப்பு!
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் பறக்கும்சாலை கட்டுமானப் பணிகள் 2024 டிசம்பர் மாதம் நிறைவடையும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது RBI! வீடு,வாகனம், தனிநபர் கடன்களின் வட்டி அதிகமாகும்!
ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர்த்த பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2022 மே மாதம் முதல் இதுவரை 4 முறைகளில் ரெப்போ வட்டி விகிதம் 1.9% உயர்த்தப்பட்டுள்ளது.
ஹவாலா பணம் ரூ.10 கோடி சிக்கியது! நான்கு பேர் கைது! தடை செய்யப்பட்ட PFI அமைப்புக்கு தொடர்பா என விசாரணை?
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸார் நேற்று இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
