சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வழங்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடவில்லை! ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!
அக்டோபர் 17-ல் காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24-ல் தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய நாளை (செப்டம்பர் 30) கடைசி நாள். தேர்தல் முடிந்த இரண்டாவது நாள் (அக்டோபர் 19) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.
இளம் தலைமுறையினரை பிஎப்ஐ தவறாக வழிநடத்தியது! தடையை வரவேற்பதாக முஸ்லீம் லீக் அறிவிப்பு!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து பாஜக நிர்வாகிகள், இந்து இயக்கங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
RSS பேரணிக்கு தடை கேட்ட திருமா! உச்ச நீதிமன்றத்தில் முறையிட ஐகோர்ட் உத்தரவு!
தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
PFI மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்த இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் போன்றவற்றில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி! காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் வீரர்களுக்கு அழைப்பு!
காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பாக, மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் வரும் அக்டோபர் 1ம் தேதி தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற இருக்கிறது.
