முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க அக்கட்சி எம்.பி., ராகுல் கர்நாடகா சென்றுள்ளார். சித்ரதுர்கா மாவட்டம் சென்ற ராகுல், அங்குள்ள ஸ்ரீமுருக ராஜேந்திர மடத்திற்கு சென்றார்.
சாக்குப் பையிலேயே முளைத்த நெல் மணிகள்! வீணாய்போன ஆயிரம் டன் நெல் மூட்டைகள்!
மதுரை மாவட்டம், தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெற்கதிர்கள், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. அத்தகைய பிரம்மாண்டமான இடவசதியை கொண்ட மிகவும் முக்கியமான சேமிப்பு கிடங்காக இது உள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்! மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை முயற்சி!
கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு ஆங்கில வாசிப்பு மற்றும் எழுதும் திறன் மிக மோசமாக உள்ளது. சமீபத்திய மதிப்பீட்டின் அடிப்படையில், 90 சதவீதத்திற்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத் தொடர்புத் திறன் இல்லை என்று தெரியவந்துள்ளது.
விளம்பரங்களில் மூழ்கிக் கிடக்கும் விடியா அரசு! மழையால் பாதித்தவர்களுக்கு உதவ கட்சியினருக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்!
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கடந்த வியாழன் (28.7.2022) அன்றே, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதே போல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது.
பால் அளவை குறைத்து ஆவின் விற்பனை! தினமும் ரூ.2 கோடி மோசடி என புகார்! நீதி விசாரணைக்கு வலியுறுத்தல்!
ஆவின் பால் பாக்கெட் அளவு குறைவாக இருப்பதால், விற்பனையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் இயலாமை! ஆகஸ்ட் 15ல் பெற்றோரைக் கூட்டி முறையிட ஆசிரியர்கள் முடிவு!
டிபிஐ வளாகத்தில், இராணுவக் கட்டுப்பாடு போன்ற ஒரு அறையிலிருந்து, திடீர் திடீரென பிறப்பிக்கப்படும் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமா? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது.
