உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். போர் காரணமாக அந்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது.
நடப்பு நிதியாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டம்! ஈஷாவின் ‘காவேரி கூக்குரல் இயக்கம்’ மும்முரம்!
தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் வாயிலாக 1 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் நட ஈஷா திட்டமிடப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஈஷா நர்சரிகளில் தரமான டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மரணத்தில் ஆதாயம் தேடுகின்றனர்! உடலை வைத்து பந்தயம் கட்டுவதா? ஐகோர்ட் காட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விருத்தாசலத்தை அடுத்த பெரிய நெசலூரை சேர்ந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி இரவு அவர் மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் மரணம் அடைந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் மீட்டருக்கு மாத வாடகை! மீட்டர் இடமாற்றத்துக்கு டபுள் சார்ஜ்! மின்வாரியம் அதிரடி திட்டம்!
நுகர்வோருக்கு அடுத்த அதிர்ச்சியாக வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின் மீட்டர்களுக்கு வாடகை வசூலிக்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுவரையில் மின் மீட்டர் டெபாசிட் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதற்கு மாத வாடகையாக ரூ.60 வீதம் இரண்டு மாதத்திற்கு ரூ.120 வசூலிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
அதிமுக அலுவலக சீல் அகற்றம்! ஈபிஎஸ் தரப்பிடம் சாவி ஒப்படைப்பு! தீவிர போலீஸ் பாதுகாப்பு!
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
சீலை அகற்றி சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும்! கட்சி அலுவலக வழக்கில் ஐகோர்ட் அதிரடி!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்படிருந்த சீலை அகற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தலைமை அலுவலகத்தின் சாவியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
