அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த மோதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்த 14 பேரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து வரவேற்றார்.
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு! 25ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! ஈபிஎஸ் அறிவிப்பு!
மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 25-ம் தேதி திங்கட்கிழமையன்று, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிரடியாக உயர்கிறது மின் கட்டணம்! யூனிட்டுக்கு எவ்வளவு அதிகரிப்பு? முழு விவரம்!
சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஆசிரியர்கள் கைது! வன்முறையாளர்களை கொத்துக் கொத்தாக தூக்கும் போலீஸ்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரம், தொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை அடையாறு கிரவுண் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்த வழிகாட்டுதல்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
திறனற்ற அரசின் வெளிப்பாடே வன்முறை! உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக தலைவர்கள் கண்டனம்!
சின்னசேலம் கணியாமூர் தனியார் பள்ளி மாணவி பலியான வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பள்ளி மாணவி மர்ம மரணம்! 2 மணி நேரத்தில் திரண்ட 8000 பேர்! பெரும் வன்முறை!
சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
