மக்கள் தொலைக்காட்சி செப்டம்பர் – 6, 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் இந்த தொலைக்காட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் இயங்குகிறது. சமுதாயத்துக்குத் தீங்கானவை எனக் கருதும் விளம்பரங்களை ஒளிபரப்புவதில்லை என்ற கொள்கையை தொலைக்காட்சி நிர்வாகம் பின்பற்றி வருகிறது.
டெங்கு, சிக்குன் குன்யா பயம் வேண்டாம்! புதுவை பூச்சி கட்டுப்பாட்டுத்துறை அசத்தல் கண்டுபிடிப்பு!
மழைக்காலம் தொடங்கி விட்டால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. மழைக்காலத்தில் உருவாகும் கொசுக்களால் பலவித நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், இந்த கொசுக்களை ஒழிக்கவும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை தலைமையாக தேர்வாகிறார் EPS! உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், ‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி! திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சாடும் பாஜக!
‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி காரணமாகவே, ராஜஸ்தானில் அப்பாவி தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள் மவுனம் காப்பதாக, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை தொடங்குகிறது! வகுப்பு நடத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவு!
தமிழகம் முழுவதும் 2,381 மையங்களில் எல்கேஜி -யுகேஜி மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டுள்ள தொடக்கக் கல்வித்துறை, தற்பொழுது ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாத நிலையில், அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
