கருப்பு கவுனி அரிசி, இந்தியாவில் தமிழ்நாட்டின் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய அரிசி வகை. சமைத்தவுடன் ஊதா நிறமாக மாறிவிடுவது இதன் தனிச்சிறப்பு. பல்வேறு ஊட்டச்சத்துகள் அதிகமாக இருப்பதன் காரணமாகவே கருப்பு கவுனி அரிசியை அரிசிகளின் ராஜா என்கிறார்கள்.
மூல நோய்க்கு நிவாரணம் தரும் 5 வகை உணவுகள்! Foods That Cure Piles: Top 5 Dietary Remedies!
மலக்குடல் மற்றும் ஆசனவாயின் உட்பகுதியில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதே மூல நோய் அல்லது பைல்ஸ் எனப்படுகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு, அவர்களின் குடல் இயக்கத்தின் போது, இரத்த நாளங்களின் உட்புறங்கள் மிகவும் மெலிந்து நீண்டு காணப்படும்; அதனால் நரம்புகள் வீங்கி எரிச்சலடையலாம்.
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் புக்கிங் நாளை ஆரம்பம்! சிறப்பம்சங்கள் என்ன? விலை இவ்வளவுதானா?
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கியூபெர்டினோ என்ற இடத்தில் கடந்த 9-ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு “இட்ஸ் க்ளோடைம்” என்று ஆப்பிள் நிறுவனம் பெயரிட்டிருந்தது. இதில், ஐபோன் 16 சீரிஸில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பாட்ஸ் 4, ஏர்பாட்ஸ் மேக்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்றவை அறிமுகம் செய்யப்பட்டன.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் 6 ஜுஸ்! இரத்த ஓட்டம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!
இரத்த ஓட்டம் என்பது உடல் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். இது உடல் முழுவதும் இரத்தத்தைக் கொண்டு செல்வது, உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவது, கழிவுப்பொருட்களை அகற்றுவது ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியது. இரத்த ஓட்டத்தின் பின்னணியில் உள்ள நுணுக்கமான செயல்பாடுகள் மற்றும் இயற்கையாகவே அதனை மேம்படுத்தும் 6 பானங்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.
டிட்டோஜாக் போராட்டம் மிகப்பெரிய வெற்றி! துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் முறைகேடுகள் வெளிவரும்! ஐபெட்டோ பகிரங்க எச்சரிக்கை!
70% பள்ளிகளுக்கு மாற்று பணியில் ஆசிரியர்களை அனுப்புவதற்கு கூட வழியில்லாததுதான் பள்ளிக் கல்வித்துறை தற்போதைய நிலை என்று கூறியுள்ள ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், கல்வித்துறையை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.
