அனைத்து செய்திகளையும் மதக் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது! இணைய ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

0
12

இணைய ஊடகங்களில் பல, அனைத்து செய்திகளையும் மதக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதால், இந்தியா மோசமான பெயரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என உச்சநீதிமன்றம் விமர்சனம் கூறியுள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்று ஆரம்பிக்கும்போது, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் அனைத்துப் பகுதியில் இருந்தும் முஸ்லிம்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு சொந்த மாநிலம் திரும்பினர்.

இதையடுத்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஒருசேர கொரோனா தொற்று அதிகரித்தது. விமான நிலையங்கள் அல்லாத நகரங்களிலும் கொரோனா பரவ தப்லிகி ஜமாத் மாநாடுதான் முக்கியக் காரணம் என செய்திகள் வெளியாகின. சில இணைய ஊடகங்களில் இதுகுறித்து கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிடப்பட்டன. இதனால் ஒரு பிரிவினருக்கு எதிராக மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டதுஅப்போது பலர் கைது செய்து செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தப்லிகி ஜமாத் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறும்போது, ‘‘ மீடியாக்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவு செய்திகள், நாட்டில் எல்லாவற்றையுமே வகுப்புவாத கண்ணோட்டத்துடன் காண்பிக்கின்றன. இதுதான் பிரச்சினை. இதன்காரணமாக இறுதியாக இந்தியா மோசமான பெயரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இணையதளம் மிகவும் வலிமையானவர்களின் குரல்களை மட்டுமே கேட்கின்றன. நீதிபதிகள், நிறுவனங்களுக்கு எதிராக எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் எழுதுகின்றன. வலிமையானவர்களை பற்றியே அவை அக்கறை கொள்கின்றன. பொதுமக்கள், நீதிபதிகள், நிறுவனங்கள் குறித்து அக்கறை கொள்வதில்லை

அனைத்தும் மதக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறது. வெப் போர்ட்டல்கள் நம்பகத்தன்மையுடன் இல்லை. இணைய செய்தி ஊடகங்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. யூ டியூபில் தவறான செய்திகள், தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதை யார் வேண்டுமானாலும் செய்ய முடிகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஊடக சுதந்திரம், சரியான செய்திகளை பெறுவதற்கான மக்களின் உரிமை முக்கியம். தவறான செய்திகளோ, தவறான தகவல்களோ ஒளிபரப்பப்படுவதை தடுக்க தேவையான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனஎன்று கூறினார்.   

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry