புதிய வாகன காப்பீட்டு முறையை(5 years Bumper – Bumper) அமல்படுத்துவதில் குழப்பம்! ஐகோர்ட் உத்தரவு தற்காலிக நிறுத்தம்!

0
48

புதிய வாகனங்களுக்கான காப்பீட்டு முறையை அமல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐகோர்ட் தனது உத்தரவை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிதாக கார்கள் விற்கப்படும் போது, பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீட்டு பாலிசி எடுப்பதை கட்டாயமாக்கப்பட வேண்டும் என கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டது. அதை, போக்குவரத்து துறை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.

இதையும் படிக்க :- அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டு காப்பீடு! வரும் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதையடுத்து, புதிய நடைமுறையை நேற்று முதல் பின்பற்றும்படி, போக்குவரத்து துறை இணை ஆணையர் முத்து, மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால் 4 சக்கர வாகனம் வைத்துள்ளோர் மற்றும் வாங்குவோரிடம் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 5 ஆண்டுகளுக்கு, பம்பர்பம்பர் மொத்த காப்பீடும் செய்தால், நான்கு சக்கர வாகனத்துக்கு கூடுதல் செலவாகும் என அவர்கள் கூறினர். எந்த காப்பீட்டு நிறுவனத்திடமும் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதற்கான பேக்கேஜ் இல்லை என்பதால், தமிழகத்தில் புதிய கார்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 1-ந் தேதி முதல் வாங்கப்படும் வாகனங்களுக்கு பம்பர்பம்பர் இன்சூரன்ஸ் கட்டாயம் என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் மற்றும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை வரும் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தது

முன்னதாக, General Insurance Council (GIC)கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தது. அதில், உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் குழப்பம் இருப்பதால், அதுபற்றி தெளிவுபடுத்துமாறு அந்தக் கவுன்சில் கோரியிருந்தது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலை பெற்று, கணினியில் தேவையான மாற்றங்களை செய்வதுடன், முகவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டி இருப்பதால், உத்தரவு அமல்படுத்த 90 நாட்கள் அவகாசம் வேண்டும் என GIC கோரியது.

முன்னதாக, Bumper-to-Bumper என நீதிமன்றம் குறிப்பிடுவது என்ன?, நீதிமன்றம் பேக்கேஜ் பாலிசியை குறிப்பிடுகிறதா? 5 ஆண்டுகளுக்கு பாலிசி எடுப்பது கட்டாயம் என்றால், ஒரே முறையில் 5 ஆண்டுகளுக்கு எடுக்க வேண்டுமா? அல்லது ஒவ்வொரு வருடன் என்ற முறையில், 5 ஆண்டுகளுக்கு அடுத்தடுத்து எடுத்துக்கொள்ளலாமா?, புதிய உத்தரவின் கீழ் எந்தெந்த வாகனங்கள் வரும்? என ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் அடுக்கடுக்கான சந்தேகங்களை நீதிமன்றத்தில் எழுப்பியுள்ளதாக தெரிகிறது.

இதுபற்றி காபபீட்டு நிறுவன ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, “ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். ‘பம்பர் டூ பம்பர்காப்பீடு மிகச் சிறந்த திட்டம். இதனால், வாகன விபத்தில் பாதிப்படையும், மூன்றாம் நபர், வாகனம், வாகனத்தில் இருப்போர் என, அனைவரும் பயனடைவர். புதிய மாற்றத்துக்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலை பெறுவது அவசியம். அவ்வாறு செய்யாமல் உடனடியாக அமல்படுத்துவதால், அதிருப்தியும், முறைகேடுகளும் தான் அதிகரிக்கும். விருப்பப்படி, காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் சுதந்திரம் இருக்காதுஎன்கின்றனர். அதேநேரம், கோர்ட் உத்தரவு அமல்படுத்தப்படும் பட்சத்தில், வாகன விற்பனை கணிசமாகக் குறையும் என்று விற்பனை முகவர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry