அம்பேத்கர் பார்வையில் ‘பெரியார் ஒரு குழப்பவாதி’! ‘எல்லையோடு நின்று கொள்’ என்பதே பெரியாரியம்!

0
312

அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களை நினைவுகூர்ந்து விட்டார்கள். ஆனால் அவரின் கொள்கைகளில் துளியேனும் மனதில் இவர்கள் ஏற்றுக்கொண்டவர்களா? என்றால், இல்லை, என்பதே நமது வாதம்.

அம்பேத்கரை சேரிக்குள் அடைத்ததுதிராவிடம்

எந்த சேரி இருக்கக்கூடாது என்று தன் காலம் முழுதும் போராடினாரோ, அதே சேரிக்குள்தான் இன்று அண்ணலை அடைத்து வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டி அவர் வெளியே வரமுடியாது. இதுதான் சமூக மாற்றம். அண்ணலின் சிலைகள் ஒருக்காலமும் சேரிகளைவிட்டுத் தாண்டாது.

இன்றைய தேதியில் பல ஊர்களில் இந்த நிகழ்வுக்கு, ‘சேரியைத் தாண்டி வராதேஎன்ற குரல்தான் ஓங்கி ஒளித்துக் கொண்டிருக்கின்றது. அரை நூற்றாண்டைத் தாண்டியசாதி ஒழிப்புபுரட்சி இப்படித்தான் நடந்துகொண்டிருக்கின்றது. மறுப்பவர்கள் ஆத்திரப்படலாம். உண்மை இதுதான்.

கி. வீரமணி எத்தனை சிலைகளை நிறுவினார்?

உலக தத்துவ மேதைகளுக்கு இணையாக, அதையும் தாண்டியவராக இருந்தவர் அண்ணல் அம்பேத்கர். ஆனால் அவரை ஒரு சாதி தலைவராக சுறுக்கிவிட்டதில் ஆர்.எஸ்.எஸ்.-காங்கிரசுக்கு என்ன பங்கு இருந்ததோ, அதே அளவிலான பங்குதான் இங்கிருக்கும்திராவிடத்திற்கும்’.

இப்படிச் சொல்வதால் பெரியாரிஸ்ட் தோழர்கள் ஆத்திரப்படலாம். அவர்களுக்கானவர்கள் கோபப்படலாம். எது நிகரினும் உண்மை, உண்மையே. பெரியார் மடத்தில் இருக்கும் ஆசிரியர் வீரமணி அவர்கள், இந்த ஐம்பதாண்டுகளில் எந்தெந்த ஊரில் பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளில் அண்ணல் அம்பேத்கர் சிலையை நிறுவியிருக்கின்றார்? எந்த அக்ராகரத்தில் அம்பேத்கரை நிறுவியிருக்கின்றார்?

ராமதாஸ் செய்ததைக் கூட திமுக செய்யவில்லை

இரட்டைக்குழல் துப்பாக்கியில் ஒரு குழலாக இருக்கும் திமுக, எங்கெங்கே அப்படி செயல்படுத்தியிருக்கின்றது? ஐம்பதாண்டுகளைத் தாண்டியும், ‘நீங்கள் எல்லாம் பொதுத் தொகுதிக்கு ஆசைப்படக்கூடாதுஎன்பதுதானே அவர்களின் திராவிடக் கொள்கையாக உள்ளது? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் செய்ததைக்கூட இந்ததிராவிடம்செய்யவில்லை. அவர் இப்போது மாறியிருக்கலாம், அது வேறு. ஆனால், அண்ணலை முன்னிறுத்தி பல மாற்றங்களை செய்தார்.

இப்போது திரைத்துறைக்கு வந்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித் திரையில் தன் பங்காக அண்ணலை பொதுமைபடுத்திய அளவிற்குக்கூடதிராவிடம்எடுத்த திரைப்படங்கள் செய்திருக்கவில்லையே. பெரியார், அண்ணாவை, முதன்மை மற்றும் பொதுமைபடுத்திய அளவிற்கு அண்ணலை செய்யவில்லையே ஏன்? எதனால்?

கேட்டால், நாங்கள்தான் அண்ணலை தூக்கிப் பிடித்தோம், அம்பேத்கர் சட்டக்கல்லூரி பெயர், அம்பேத்கர் மணி மண்டபம் என்ற கதையை (மணி மண்டபம் செல்வி ஜெயலலிதா செய்தது) உருட்டுவார்கள். தேர்தல் அரசியலுக்காக இது எல்லா மாநில கட்சிஅரசியலும் செய்யக்கூடியவழக்கத்தில்ஒன்றுதான். அதுவல்ல மாற்றம்.

பெரியாருக்கு சாத்தியமானது, அம்பேத்கருக்கு ஆகவில்லை

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் பேச்சுக்களை, நூல்களை, முன்னெடுத்துச் சென்றதில், அவரின் சிலைகளை முன்னெடுத்துச் சென்றதில், ஒரு பங்கைக்கூட அண்ணல் அம்பேத்கருக்குச் செய்யவில்லை. அண்ணல் அவர்கள் சொல்லாத சித்தாந்தம் இல்லை. பேசாத அரசியல் இல்லை. எல்லவாற்றையும் தனது படிப்பறிவுபட்டறிவின் மூலம் ஆய்ந்து, பேசி, எழுதி வந்திருக்கின்றார்.

அவற்றை எல்லாம் இவர்கள் எந்தளவிற்கு இளைஞர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்கள்? பள்ளிக் கல்லூரி பாடத்திட்டங்களில் எவ்வளவு வைத்திருக்கிறார்கள். (ஒடுக்கப்பட்டவர், சாதிதலைவர், சட்டமியற்றினார் என்பதைத்தாண்டி) அவர் எழுதிய சமூகபொருளாதார மாற்றம் குறித்து எதையெல்லாம் சேர்த்திருக்கிறார்கள்?

பெரியார் கொள்கையை உருமாற்றிய திமுக

அவருடைய நூல்களை எல்லாம் எந்தளவு எளிமைப்படுத்தியுள்ளீர்கள்? எந்தளவு  சமூகத்தின் எல்லா தளங்களிலும் சேர்த்திருக்கிறீர்கள்? இதுவெல்லாம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஆனால் பெரியார் ஈ.வெ.ராவுக்கு இது எல்லாமும் சாத்தியமாகி உள்ளது.

இத்தனைக்கும் பெரியாரின் கொள்கைகளை எல்லாம் இவர்கள் கடைப்பிடித்தார்களா? நடைமுறைப் படுத்தினார்களா? இந்துத்துவாவை எதிர்த்தார்களா? பார்ப்பனீயத்தை அழித்தார்களா? சாதி சமநிலைக்கான களப்பணியை செய்தார்களா? என்றால் இல்லை. “எங்கள் கட்சியில் 99 சதவீதம் இந்துக்கள்தான்என்ற கட்சிக்கு முட்டுக்கொடுப்பதாகத்தான்பெரியார் கொள்கையை உருமாற்றியிருக்கிறார்கள். போகட்டும்.

பெரியார் குழப்பவாதிஅம்பேத்கர்

இவர்கள் ஏன் அண்ணலைப் பற்றி மெனக்கிடாமல் இருக்கிறார்கள் என்றால், அண்ணல் எப்போதும் பெரியாரைக் கொண்டாடியிருக்கவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட தன் புத்தகங்களில், பெரியாரைப் பற்றி சிறப்புற ஏதும் சிலாகிக்கவில்லை.  பெரியார் ஒரு குழப்பவாதி, தெளிவான சித்தாந்தம் அற்றவர்என்றளவில்தான் கடந்து போயிருக்கின்றார். அதனாலோ என்னவோ இவர்கள் அண்ணலின் நூல்களை பரவலாக முன்னெடுத்துச் செல்லவில்லை எனத் தோன்றுகிறது.

பெரியார் பற்றி அண்ணல் சொன்ன அதே கருத்தைத்தான், “சென்னையில் உம் நடவடிக்கைகளை நேரில் கண்டதிலிருந்து, நீர் ஒரு தெளிவற்ற மனிதர் என்பதை அறிந்து கொண்டேன்ஆகவேஎன பாகிஸ்தான் பிரிவினை கேட்டு போராடிப் பெற்ற முகமது அலி ஜின்னாவும் கடிதம் எழுதினார்.

பூதாகரமாக்கும் ஊடகர்கள்

இருபெரும் போராளிகளும் சொன்னகுழப்பவாதிதெளிவற்றவர்என்ற ஈ.வெ.ரா.-வைத் திணித்த அளவிற்கு, அண்ணலை மட்டுமல்ல, மற்ற சாதி ஒழிப்பு போராளிகளான, வள்ளலாரையோ, ஐயா வைகுந்தரையோ, அயோத்திதாச பண்டிதரையோ, ரெட்டமலை சீனிவாசனையோ, தேவர் ஐயாவையோ இவர்கள் பேசவில்லை. இப்படியானவர்கள்தான் ஒப்புக்கு அழுகிறார்கள்அம்பேத்கரிஸம்பெரியாரிஸம்என்று.

சில ஊடக தோழர்கள், ‘பெரியாரும்அம்பேத்கரும்ஏதோ ஒரே தட்டில் சாப்பிட்ட உறவில் இருந்ததாக அடித்துவிடுவார்கள். ஆனால், அண்ணல் அப்படி எங்கேயும் குறிப்பிடவில்லை. அதனால் தான் திராவிட அரசியல், அண்ணல் அம்பேத்கர் அவர்களை, அவரின் சமூகப் பார்வையில் கொண்டுசெல்லவில்லை. மறித்து நின்றார்கள்நிற்கிறார்கள்.

அம்பேத்கர் மீதான பெரியாரின் வன்மம்

பெரியாருக்கு, அண்ணல் அம்பேத்கர் மீது இருந்த வன்ம மனநிலைக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். ‘‘அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார். ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?’ என்று. நிறைய விவரங்களையெல்லாம் அவரிடம் கொடுத்தேன்; அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்ன விலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100-க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார். அவன் ‘15-ஆகவே எடுத்துக்கொள்என்று சொல்லிவிட்டான்.! அவனுக்குத் தெரியும் 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.’’-விடுதலை 11.11.1957.

எவ்வளவு வன்மம்?. ஒன்று அம்பேத்கருக்கு சட்ட அறிவு இல்லை, பார்ப்பனருக்குத்தான் இருக்கிறது. பார்ப்பான் எழுதிக்கொடுத்ததில் இவர் கையெழுத்துப் போட்டுவிட்டார், அந்த சாதியானுக்கு எத்தனை கொடுத்தாலும் 4-க்கு மேல தேற மாட்டான். என்றசாதி இந்துவின் பொது புத்தி’! எலக்காரம். அப்படி என்றால்சாதி ஒழிப்புபிரச்சாரம்முழக்கம் எல்லாம் பொய்தானே கோபால் என கேட்கவில்லை. புத்தியில் இருப்பதுதானே எழுத்தில் வந்திருக்கிறது என்கிறோம்.

இப்படியானவரை மிகத் தெளிவாக அறிந்துகொண்டதால்தான, முகமது அலி ஜின்னாவும், அண்ணல் அம்பேத்காரும்தெளிவற்ற மனிதர்என குறிப்பிட்டார்கள். இப்படியான ஈவெரா முழக்கத்தில் இருந்தவர்கள்தான் இன்று அண்ணல் அம்பேத்கர் சிலைக்குபடத்திற்கு மாலையிட்டுதலித் தலைவர்என மீண்டும் மீண்டும் நினைவு படுத்திவிட்டுச் செல்கிறார்கள்.

.வெ.ரா. மட்டும் சாதித் தலைவர் இல்லையா?

ஐயா வைகுந்தர் ஒரு ஒடுக்கப்பட்ட சாதித் தலைவர்(முன்பு)

ஐயா பொன் முத்துராமலிங்கத் தேவர்ஒரு சாதி வெறியர்.

அயோத்திதாசப் பண்டிதர்தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்

அண்ணல் அம்பேத்கர்தலித் தலைவர்

டாக்டர் தொல்.திருமாவளவன்தலித் தலைவர்.

ஐயா ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமிபள்ளர் சமுதாயத் தலைவர்கள்.

ஆனால் ஈ.வெ.ரா. பெரியார்நாயக்கர்மட்டும் சாதித் தலைவராக மாட்டார். கலைஞர் கருணாநிதிசின்னமேலம்சாதித் தலைவராக மாட்டார். ஐயா வைகோ, விஜயகாந்த் உள்ளிட்டவர்களும் சாதிக்கு தலைவராக மாட்டார்கள். ஒட்டுமொத்ததமிழினத்தின்தலைவராகவே இருப்பார்கள்இருக்க வேண்டும். அதுதான் பெரியாரிஸம்.

இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள புரிதல்

இறுதியாக, இன்றைய இளைஞர்கள், சாதிகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள். ‘அண்ணலை’, மற்ற சாதி ஒழிப்பாளர்களை பொது கட்டமைப்பிற்குள் வைக்க முனைகிறார்கள். அவர்களிடம் புரிதல் ஏற்பட்டுள்ளது. அதற்கான நெறிப்படுத்தும் முறையை திராவிடம் முன்வைக்கவில்லை. ‘எல்லையோடு நின்று கொள்என்பதே பெரியாரியமாகி உள்ளது. இவர்களின் சாதி ஒழிப்பு புரட்சி எல்லாமும் உதட்டளவில் மட்டுமே.

அவர்களின் அடுத்தடுத்தவழி பின்பற்றாளர்களுக்கும்அதுவே திணிக்கப்படுகிறது. அதை மாற்றவேண்டும் என்பதற்கான புதிய பாதையை திறக்க வேண்டும் என்பதே அண்ணலுக்கான நினைவு நாளில் நினைவு கூற வேண்டிய ஒன்று. அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ்மற்றவர்களை புதைத்துவிட்டு காந்தியை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. அதிகாரத்தில் இருந்த திராவிடம்மற்றவர்களை மறைத்துவிட்டு ஈ.வெ.ரா.வை மட்டுமே முன்னிலைப்படுத்தியது.

கட்டுரையாளர் : பா. ஏகலைவன், மூத்த பத்திரிகையாளர். குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற முன்னணி இதழ்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா – நளினி சந்திப்பும், சிவராசன் டாப் சீக்ரெட், தூக்குக் கயிற்றில் நிஜம், முள்ளிவாய்க்கால் முடிவல்ல போன்ற நூல்களை தொகுத்தும், எழுதியும் உள்ளார். தற்போது “ராவணா” என்ற இணையவழி தொலைக்காட்சியை நடத்தி வருகிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry