சென்னையில் அர்ஜுன் சம்பத் மீது தாக்குதல்! இந்து மக்கள் கட்சி – விடுதலை சிறுத்தைகள் கைகலப்பால் பதற்றம்!

0
17

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தச் சென்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜா அண்ணாமலைபுரத்தில், மணிமண்டபத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நிர்வாகிகளுடன் சென்றார். அங்கு திரண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் அவர்களை அனுமதிக்காமல் கெரோ செய்தனர். சனாதனத்தை வேரறுப்போம், காவியை ஒழிப்போம் என முழக்கமிட்டவாறு, அர்ஜுன் சம்பத்தையும், நிர்வாகிகளையும் அவர்கள் தாக்கினர்.

போலீஸார் தலையிட்டு அர்ஜுன் சம்பத்தையும், அவரது கட்சி நிர்வாகிகள் சிலரையும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த அழைத்துச் சென்றனர். இதனால் அம்பேத்கர் மணிமண்டபத்தில் பெரும் பதற்றம் நிலவியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் இந்தச் செயலுக்கு, இந்து அமைப்புகள் மட்டுமின்றி பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கோ, திமுகவுக்கோ அம்பேத்கர் தலைவர் அல்ல, அவர் அனைத்து இந்தியர்களுக்குமான தலைவர் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உணர வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry